Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாய்லாந்து பொண்ணு இங்கே ஸ்டார் ஓட்டல் ரூமில் எப்படி? விபச்சாரத்தில் பிரபலம்? பெரிய கும்பல் சிக்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், முறையான அனுமதி இல்லாமல், லைசென்ஸ்களை புதுப்பிக்காமல், ஸ்பா என்ற பெயரில், மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன.. இங்கெல்லாம் விபச்சாரங்கள் நடப்பதும் பெருகி வருவதால், போலீசாரின் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.. இதுபோலவே பல்வேறு மாநிலங்களில் போலீசார், விபச்சாரத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து, அங்கு பாதிக்கப்பட்டுள்ள பெண்களையும் மீட்டு வருகின்றனர். அந்தவகையில், குஜராத்தில் ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.

விபச்சாரத்தில் இளம்பெண்களை ஈடுபடுத்தி, அதன்மூலம் காசுபார்க்கும் கும்பல் அதிகரித்தபடியே உள்ளது.. கிராமப்புறங்களிலிருந்து ஏராளமான இளம்பெண்கள், வேலை தேடி நகர்ப்புறத்துக்கு வர நேரிடுகிறது.

Prostitution Star Hotel Room VIP Thai Beauties

அதேபோல, சினிமா, டிவி சீரியல்களில் வாய்ப்பு தருவதாக சொன்னதை நம்பி பலரும் நகர்ப்புறத்துக்கு வருகிறார்கள்.. அதேபோல, குடும்ப சூழ்நிலை, வறுமை போன்ற நெருக்கடிகளுக்கு ஆளாகும் பெண்களும் இதில் சிக்கி கொள்கிறார்கள்.. இப்படி பணத்தேவை உள்ளவர்களையும், சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல வழி இல்லாதவர்களையும், குறிவைத்து பாலியல் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.

தாய்லாந்து பெண்கள்

அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைகாட்டி, உரிமம் பெறாத மசாஜ், ஸ்பா சென்டர்களில், இந்த அப்பாவி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிடுகிறார்கள்.. இதில் பல வெளிநாட்டு பெண்களும் அடக்கம்..

எனவேதான், தமிழ்நாடு முழுவதும் போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பது உறுதியானால், அவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் கைது செய்து வருகிறார்கள். வெளிமாநிலங்களிலும் இந்த பாலியல் அக்கிரமங்கள் தொடர்கின்றன.

தற்போது, சூரத்தில் இயங்கி வந்த மிகப்பெரிய விபச்சார கும்பலை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை தந்து வருகிறது.. குஜராத் மாநிலம், சூரத் நகரில் உள்ள ஜஹாங்கீர்புரா பகுதியில் பார்க் பெவிலியன் என்ற ஸ்டார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது.. இந்த ஓட்டலில் மிகப்பெரிய விபச்சார கும்பல் இயங்கி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பிரபல ஸ்டார் ஓட்டல்

இந்த தகவலின் பேரில், போலீசார் அந்த ஓட்டலுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.. ஒவ்வொரு அறைகளிலும் சோதனை செய்தனர்.. அப்போது, அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானதுடன், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 13 இளம் பெண்களை போலீசார் மீட்டனர்.

அத்துடன், இந்த கும்பலை சேர்ந்த ஓட்டல் மேனேஜர் உள்ளிட்ட 9 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.. அப்போது விபச்சாரத்தில் ஈடுபடும் கஸ்டமர்களிடமிருந்து ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது.

முக்கிய புள்ளிகள் யார்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், போலீசார் இந்த கும்பலை கைது செய்வதற்கு முன்பு, சாதாரண விபச்சார கேஸ் என்று நினைத்துள்ளனர்.. ஓட்டலுக்கு சென்று ரெய்டு நடத்தியபோது, மிகப்பெரிய விபச்சார கும்பல் என்பது தெரியவந்துள்ளது.. இவர்களுக்கு பல முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது..

ஆனால், இந்த விபச்சார கும்பலின் மூளையாக செயல்பட்டவர் தலைமறைவாக உள்ளாராம்.. அவர்தான் இந்த கும்பலின் முக்கிய குற்றவாளி என்பதால், அவரை பிடித்தால்தான், அனைத்து உண்மைகளும் தெரியவரும் என்கிறார்கள் போலீசார். குஜராத் ஸ்டார் ஓட்டலில் நடந்த விபச்சாரத்தில் தாய்லாந்து அழகிகள் 13 பேர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+