லாக்டவுன்: ப்ளூ ஃபிலிம் பார்க்க தோன்றுதா.. ஃபிரியா விடுங்க.. மனநல மருத்துவர் சுபா சார்ல்ஸ் அசத்தல்!
சென்னை: லாக்டவுன் நேரத்தில் போனில் ப்ளூ ஃபிலிம் பார்ப்பதை பெற்றோர்கள் தடுக்கலாமா என்பது குறித்து மனநல மருத்துவர் சுபா சார்ல்ஸ் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகத்தையே மிரட்டி வருகிறது. உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியிருக்கிறது.
உலகம் முழுக்க உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு ஒன்னேகால் லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குடிக்காம இருக்க முடியலையா.. கைகால் உதறுதா.. டாக்டர் சுபா சார்ல்ஸ் சொல்ற ஆலோசனைய கேளுங்க!

ஆலோசனை
இதனால் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் மக்கள் இந்த லாக்டவுன் காலத்தை எப்படி கழிக்க வேண்டும், கொரோனா பயத்தை எப்படி போக்க வேண்டும், மது பிரியர்கள் எப்படி இந்த லாக்டவுனை சமாளிக்க வேண்டும், வொர்க் ஃபிரம் ஹோம் செய்பவர்கள் எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்து மனநல மருத்துவரான சுபா சார்ல்ஸ் ஆலோசனை வழங்கி வருகிறார்.

ப்ளூ ஃபிலிம்
அந்த வகையில் இன்று லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருப்பவர்கள் ப்ளூ ஃபிலிம் பார்ப்பது குறித்தும் அதற்கு பெற்றோர் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, இந்த லாக்டவுன் நேரத்தில் அதிகம் போன் பார்க்கிறார்களா, அதிகமாக ப்ளூ ஃபிலிம் பார்க்கிறார்களா? வேண்டாத வீடியோக்களை பார்க்கிறார்களா?

கூக்குரல் போடனுமா?
இதற்காக பெற்றோர் டென்ஷன் ஆக வேண்டுமா? கூக்குரல் போடனுமா? தேவையே இல்லை. ரிலாக்ஸா இருங்க. பல ஆன்மிகத் தலைவர்கள் ஆசியாவில்தான் உள்ளனர். ஜீசஸ், நபிகள் எல்லோரும் மிடில் ஈஸ்ட், பார் ஈஸ்ட் பகுதிகளில்தான் இருந்தார்கள். ஆலயங்களில் சிலைகளில், சிற்பங்களில் ப்ளூ என்று சொல்லக்கூடிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.

காமசூத்ரா புத்தகம்
அமந்பூர் என்ற மீடியா பர்சன், இந்தியாவுக்கு வரும்போது சிற்பங்களில் பாலியல் விஷயங்களா என்று ஆச்சரியப்பட்டார்கள். இதுதான் நம் நாட்டின் அழகு. இதனால் நாம் யாரும் கெட்டுப் போகவில்லை. நிறைய ஆன்மிகத் தலைவர்கள் குருக்கள் இங்குதான் உருவானார்கள். காமசூத்ரா புத்தகம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.

செக்ஸ் என்பது..
ப்ளூ பிலிம் பாக்குறாங்களா? ப்ளூ பிலிம் பாக்குறதால சைட் எஃபெக்ட்ஸ் இருக்கு.. அதனால அதிலேயே மூழ்கி விடக்கூடாது. அதில் சிக்கி டென்ஷன் ஆகி மற்றவர்களை டென்ஷன் ஆக்கக்கூடாது. செக்ஸ் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. பிள்ளைகளுக்கு அந்த அறிவு சீக்கிரம் வந்துடுதா.. ஒன்றும் தவறில்லை. 7 வயதில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறோம். 10 வயதில் வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்து கொடுத்திருக்கிறோம்.

இது நேரம் இல்லை
இப்போதும் 15, 16 வயதில் திருமணம் செய்து வைக்கிறார்கள். 18 வயதில் குழந்தை பெற்று கொள்கிறார்கள். அதனால் பயப்பட வேண்டாம். இப்போது இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று டென்ஷன் ஆக வேண்டாம். அதற்கான நேரம் இது இல்லை. எல்லாத்துக்கும் நேரம் உள்ளது. போனை பற்றி கவலைப்படவும், போனால் ஆக்ஷன் குறைவதாக எண்ண வேண்டாம்.

ரிலாக்ஸா இருங்கள்
எப்படி குறைப்பது என்று ஃபைட்டிங் மோடில் இருக்க வேண்டாம். விலங்குகளிடம் போன் உள்ளதா? குரங்கு தனது குட்டிகளிடம் அப்படி செய்யாதே இப்படி செய்யாதே என கூறுகிறதா? நாமும் விலங்குதான், மூளை மட்டும் தான் ஜாஸ்தி. அதனால் எதற்கும் டென்ஷன் வேண்டாம். ரிலாக்ஸாக இருங்கள் என கூறியுள்ளார்.

அவர்கள்தான் சொத்து
இதனை தொடர்ந்து லாக்டவுன் நேரத்தில் கூட்டுக்குடும்பத்தில் சண்டை இல்லாமல் சமாளிப்பது எப்படி என்ற கேள்விக்கும் மருத்துவர் சுபா சார்ல்ஸ் பதில் அளித்துள்ளார். கூட்டுக்குடும்பம் என்பது ஒரு சொத்து. வயதானவர்கள் இருக்கிறார்களா? அவர்கள்தான் சொத்து. அவர்களிடம் இருந்து நமக்கு வந்துவிடுமோ என்ற பயம் வேண்டாம்.

கதை சொல்வார்கள்
இந்த லாக்டவுன் நேரத்தில் தாத்தா பாட்டி, நிறைய கதை சொல்வார்கள். அவர்களின் அனுபவங்களை சொல்வார்கள். ஆனால் அந்த கான்வெர்சேஷன் ஒன் வேயாக இல்லாமல் டூ வேயாக இருக்க வேண்டும். மருமகள் பேசுவதை மாமியார் கேட்க வேண்டும் மாமியார் பேசுவதை மருமகள் கேட்க வேண்டும். அதுதான் அழகு. சில ஆண்கள் இவர்கள் இருவருக்கும் இடையே மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.

கை வந்த கலை
இதில் பாலிட்டிக்ஸ் வந்துவிடும். அம்மாவிடம் மனைவியை மட்டம் தட்டி பேச வேண்டும், மனைவியிடம் அம்மாவை மட்டம் தட்டி பேச வேண்டும். இந்த பாலிட்டிக்ஸ் நம் ஆண்களுக்கு கை வந்த கலைதான். அதனால் பயப்பட வேண்டாம். அம்மாவையும் மனைவியையும் சந்தோஷமாக வைத்திருக்கலாம். மனைவியை புரிந்துகொள்ளுங்கள். அதற்கான வழிகளை கண்டுபிடியுங்கள்.

கொரோனா ஓடிப்போயிடும்
மனைவி என்றால் சொல்வதை கேட்க வேண்டும், அம்மா என்றால் கோபப்படலாம் என்பதை மாற்றுங்கள். சேர்ந்து வாழ்வது சேலஞ்ச் தான். நீங்கள் இப்படி செய்தீர்கள் என்றால் சந்தோஷத்தால் நிறைந்து நாடே செழிக்கும். கொரோனா ஓடிப்போயிடும். இவ்வாறு மனநல மருத்துவர் சுபா சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.