சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் போற போக்கில் பொதுச்சேவை.. வாகன ஓட்டிக்கு வீடு தேடி வந்த அபராதம்
சென்னை: போக்குவரத்து போலீசாரை டேக் செய்து புகார் அளிப்பது என்பது சர்வ சாதாரணமாக சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சர்வ சாதாரணமாக இருந்து வந்தது. அப்படி புகார் அளித்தால் உடனே போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பார்கள்..இப்படி பலரும் அபராதத்தில் சிக்கினார்கள்.. இதனால் உற்சாகமான நெட்டிசன்கள் போற போக்கில் பொதுச்சேவை செய்வது போல் போட்டுக்கொடுத்து வந்தனர். அபராதமும் அதிகமானது.இந்நிலையில் இடையில் சற்று குறைந்திருந்த நிலையில், மீண்டும் தற்போது ஆன்லைன் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. சென்னை வேளச்சேரி பாலத்தில் சென்றவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் எல்லா சாலைகளிலும் அதி நவீன கேமராக்கள் உள்ளன. யார் எந்த சாலையில் சென்றாலும் எளிதாக கண்டுபிடித்து அபராதங்களை போலீசாரால் விதிக்க முடியும். அதாவது போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது மாநகர போக்குவரத்து போலீசார் யாரிடமும் கேட்காமல் வீடியோ மற்றும் புகைப்பட அடிப்படையிலேயே அபராதம் விதிக்க முடியும். இந்த விதியை பயன்படுத்தி ஆன்லைனில் புகார்அளித்தால், போக்குவரத்து போலீசார் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு விதிகளை மீறியதற்காக அபராதம் விதித்து வந்தார்கள். இது கடந்த ஆண்டு வரை அடிக்கடி பார்க்க முடிந்தது.

அதன்பிறகு சற்று குறைந்திருந்தது.இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் அபராதங்கள் விதிப்பது அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகள் தங்கள் முன்பாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காமல் அச்சுறுத்தும் வகையில் சென்றால், வாகன நம்பருடன் ஒரு புகைப்படம் எடுத்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையை டேக் செய்து புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள்.
அப்படித்தான் சென்னை வேளச்சேரி எம்ஆர்டிஸ் பாலத்தில் ஸ்கூட்டரில் இரண்டு வாகன ஓட்டிகள் மார்ச் 30ம் தேதி பயணித்துள்ளனர். அதில் வாகனம் ஓட்டிய நபர் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. இதனை புகைப்படம் எடுத்த ஒரு நெட்டிசன் தனது இணையதள பக்கத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை எக்ஸ் தள பக்கத்தில் டேக் செய்து கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து இதற்கு பதில் அளித்த சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். போக்குவரத்து போலீசார் எடுத்த உடன் புகைப்படத்தை வைத்து நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து புகாரின் உண்மை தன்மையை உறுதி செய்தே நடவடிக்கை எடுப்பார்கள். தலைகவசம் அணியாமல் செல்போன் பேசியபடி ஓட்டியவர்களுக்கு என்ன அபராதம் விதிக்கப்படும் என்பதை பார்ப்போம்.
மோட்டார் வாகன சட்டத்தின்படி, ஹெல்மெட் அணியாமல் செல்வது மற்றும் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவது ஆகிய இரண்டும் கடுமையான போக்குவரத்து விதிமீறல்களாகக் கருதப்படுகின்றன. இந்திய மோட்டார் வாகனச் சட்டம் (திருத்தப்பட்ட சட்டம்) மற்றும் தமிழக போக்குவரத்து காவல்துறையின் அபராத விவரங்களின் படி, மோட்டார் வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் ஆகிய இருவருமே ஹெல்மெட் அணிவது கட்டாயமாகும். இதற்குத் தற்போது ₹1,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்தால், ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாகப் பறிமுதல் செய்யப்படவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளது.
அதேபோல் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவது அல்லது மெசேஜ் செய்வது மிகப்பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், இதற்குப் போக்குவரத்து காவல்துறை முக்கியத்துவம் அளிக்கிறது. இதற்குத் தற்போது ₹1,000 முதல் ₹5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அதேபோல் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால், அபராதத்துடன் சிறைத் தண்டனையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications