சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று முதல் பொது போக்குவரத்து தொடக்கம்.. பயணிகள் எண்ணிக்கை குறைவு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் பொது போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் பேருந்துகள் இயக்கம் - வீடியோ

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக பேருந்து போக்குவரத்து இல்லாமல் இருந்தது. இ பாஸ் நடைமுறை கடந்த மாதம் முதல் எளிதாக்கப்பட்ட போதிலும் பேருந்து போக்குவரத்து இல்லாததால் மக்கள் அவதியடைந்தனர்.

    Public transportation in Tamilnadu starts from today

    இந்த நிலையில் இன்று முதல் பொது போக்குவரத்து இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் கட்டாயம் மாஸ்க் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.

    பயணிகளுக்கு பேருந்துகளில் கிருமிநாசினி கொடுக்கப்படுகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியமாகிறது. மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது போல் சென்னையில் வண்டலூர் வரை பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

    Public transportation in Tamilnadu starts from today

    தமிழகத்தில் இன்று முதல் இ பாஸ் முறை ரத்து.. சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசல்தமிழகத்தில் இன்று முதல் இ பாஸ் முறை ரத்து.. சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசல்

    பொது போக்குவரத்து தொடங்கிய முதல் நாளான இன்று பயணிகள் குறைந்த அளவே காணப்பட்டனர். ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. பேருந்துகளில் பயணம் செய்ய 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி இல்லை.

    சென்னை கோயம்பேட்டில் கணிசமான மக்கள் பேருந்துகளில் பயணம் செய்ய வந்துள்ளார்கள். சென்னையில் 161 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கியது.

    English summary
    Public transportation starts with minimum number of buses fly in between district in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X