யார் அப்பா வீட்டு பணம்.. கரூர் மக்களுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்?.. எடப்பாடியை விளாசிய புகழேந்தி
சென்னை: கரூர் தவெக கட்சி கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு கட்சிகள் சார்பில் நிவராணம் வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக சார்பில் நிவாரணம் வழங்கவில்லை. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்த புகழேந்தி, கட்சி பணத்தை கொடுப்பதில் என்ன கேடு. உன் கிட்ட இல்லாத பணமா. எதுக்காக டிராமா பண்ணறீங்க என கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

நிவாரணம்
பல அரசியல் கட்சிகள் நிவாரணம் வழங்கினர். தமிழ்நாடு அரசு சார்பில் கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த மக்களுக்கு ரூ.1 கோடி பிரித்துக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தவெக சார்பில் உயிரிழந்த மக்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார். அதிமுக சார்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்த நாளே கரூருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் களத்தில் சின்ன சின்ன உதவிகளை செய்தனர். இருந்தபோதும் அதிமுக சார்பில் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுப்கு என்று தனியாக நிவாரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நிவராணம் வழங்காதது அரசியல் ரீதியாக கடும் விமர்சனமாகியுள்ளது.
டிராமா
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறகையில், "அதிமுகவிடம் காசு இல்லையா. பழனிசாமி உன்னைத்தான் ஊடகம் மூலம் கேட்கிறேன். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்திட்டு டிராமா பண்ணிட்டு இருக்கீங்க. எவன், எவனுக்கோ அஞ்சலி செலுத்தாம இருக்காங்க. இதுவரை ஏன் நிவாரணம் வழங்கவில்லை
போன இடங்களில் அத்தனை அதிமுக படம் உள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ஒரு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்தால் என்ன ஆகிடுவ. பக்கத்துலயே கொள்ளையடிச்ச முன்னாள் அமைச்சர்கள் ரெண்டு பேர் இருக்காங்க. அந்தத் தொகுதியில் 3 முறை தம்பிதுரை வென்றுள்ளார். அவரும் எதுவும் செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் ரெய்டு வந்தபோது அவரை செந்தில் பாலாஜி தான் காப்பாற்றினார்.
யார் வீட்டு பணம்
அந்தக் கதைகளை எல்லாம் நான் வெளியில் எடுக்கட்டுமா. அதிமுகவில் யாருமே முன்வந்து உதவ மாட்டார்களா. நேரடியாக கேட்கிறேன் கட்சி பணத்தை நிவாரணமாக வழங்க இவர்களுக்கு என்ன கேடு. யார் அப்பா வீட்டு பணம் இது. அம்மா இருந்திருந்தால் உதவி செய்திருப்பார்களா இல்லையா. கட்சிப் பணத்தை கொடுப்பதில் என்ன பிரச்சனை.
கொரோனா காலத்தில் ஓ.பி.எஸ் இருந்தபோது ரூ. 1 கோடி கொடுத்தார்கள் தானே. ஓபிஎஸ் இருந்ததால் அது நடந்தது வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டபோது கூட அங்கு இழப்பீடு கொடுத்து வந்தீர்களே. அப்போது கரூரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மனிதர்களாக தெரியவில்லை. அவர்களை விரோதியாக பார்க்கிறீர்களா. டிராமா பண்ணறியா பழனி. தங்கமணி, வேலுமணியிடம் இல்லாத பணமா. உன்கிட்ட இல்லாத பணமா." என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications