தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி பரபரப்பு புகார்.. அதிமுக வழக்கில் அன்று சிவி சண்முகம் பேசியது என்ன?
சென்னை: இரட்டை இலை மற்றும் பொதுச் செயலாளர் வழக்கு சம்பந்தமான தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தடையானையை ரத்து செய்துவிட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தை வெறும் குமாஸ்தா என்று இழிவுபடுத்தி பேசியதாக சிவி சண்முகம் மீது புகழேந்தி புகார் அளித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை அடுத்து விசாரணையை தொடர வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் பதவி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணைய விசாரணை நடத்தக்கூடாது என்றும், தேர்தல் ஆணையம் விசாரணை தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. மேலும் அதிமுக தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இதுபற்றி அன்றைக்கே சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்பியுமான சி.வி. சண்முகம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "அதிமுக தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு விசாரிக்க அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையத்துக்கு இரண்டு அதிகாரங்கள் மட்டுமே உள்ளது. ஒன்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29A, மற்றொன்று பாரா 15 (தேர்தல் சின்னம் தொடர்பானவை). ஒரு கட்சியைப் பதிவு செய்ய வேண்டும் என்றால், அந்தக் கட்சியின் விதிகள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அவை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு இருக்கிறதா என்று பார்த்து முடிவெடுக்க வேண்டும் என்ற அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு என்கிறது 29A.
அதே பிரிவில், 29A (9) தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியில் பொறுப்பாளர்கள் மாற்றம், பெயர் மாற்றம், விதிகளில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாகத் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரியப்படுத்தும்போது அதைப் பதிவு செய்ய வேண்டியது மட்டும்தான் தேர்தல் ஆணையத்தின் வேலை. வெறும் குமாஸ்தா வேலை மட்டும் தானே தவிர, அது சரியா தவறா என்று பார்க்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு கிடையாது.
மேலும் ஒரு கட்சியில் பொறுப்பாளர்கள் மாற்றம், பெயர் மாற்றம், விதிகளில் மாற்றங்கள் மீது ஆட்சேபனைகள் இருந்தால் அதை விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. அதேபோல், ஒரு இயக்கத்தில் பிளவு ஏற்பட்டால், நாங்கள்தான் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு குழு கூறினால், தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அந்தக் குழுவிடம் விசாரணை செய்து, யார் உண்மையான அந்த அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று சொல்கின்ற அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ள என்கிறது பாரா 15.
எனவே இந்த தகவல்களின் படி, உள்கட்சி விவகாரங்களில் தலையிட தங்களுக்கு உரிமை இல்லை என்று தேர்தல் ஆணையம் நீதிமன்ற விசாரணையில் ஒப்புக்கொண்டுவிட்டது. ஆனாலும் நீதிமன்றத்தில் இப்படித் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதைத் தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாகத் தேர்தல் ஆணையம் எடுத்துக்கொண்டதை நாங்கள் எதிர்க்கிறோம்" என்று சிவி சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கடந்த வாரம் கூறியிருந்தார்.
இதனிடையே இரட்டை இலை மற்றும் பொதுச் செயலாளர் வழக்கு சம்பந்தமான தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், இது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி 18 ஆம் தேதி இன்று டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றினை சமர்ப்பித்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள ஆணையை சமர்ப்பித்து உடனடியாக அண்ணா திமுக இரட்டை இலை சம்பந்தமான வழக்கை தாமதமின்றி தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றும், மேலும் எடப்பாடி பழனிசாமி அணியை சார்ந்த சி வி சண்முகம் எம்பி, தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை குமாஸ்தா (clerical job) வேலையை பார்க்க மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என இழிவாக பேசியுள்ளதையும் புகாராக குறிப்பிட்டுள்ளார் ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!











Click it and Unblock the Notifications