வங்கி கணக்குகளுக்கு சிக்கல்.. அலர்ட்! நாளை முதல் உங்க அக்கவுண்ட் முடக்கப்படலாம்! ஏன் தெரியுமா?
சென்னை: பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. உங்கள் வங்கி கணக்கு நீண்ட காலமாக எந்த பரிவர்த்தனையும் செய்யப்படாமல் இருந்தால் நாளை முதல் மூடப்படும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் இல்லாத, அக்கவுன்ட்டில் பண இருப்பு இல்லாத வாடிக்கையாளர்களின் செயலற்ற வங்கிக் கணக்கை மூட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வங்கிக் கணக்குகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தவிர்க்கவும், ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின்படி, பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
எந்த கணக்குகள் மூடப்படும்?: கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வங்கிக் கணக்கில் எந்த பரிவர்த்தனையும் செய்யாத, பூஜ்ஜிய இருப்புக் கொண்டவர்களின் கணக்குகள் ஜூன் 30 ஆம் தேதிக்குப் பிறகு எந்தவித அறிவிப்பும் இன்றி மூடப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நீங்கள் உங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி கணக்கை 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்தால் உங்கள் வங்கி கணக்கு நாளை முதல் மூடப்படலாம். இதுதொடர்பாக, வங்கியில் இருந்து வாடிக்கைகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இன்றுடன்: தகவல் அனுப்பப்பட்ட ஒரு மாதத்தில் இந்த கணக்குகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. நீங்கள் அந்தக் கணக்குகளை செயலில் வைத்திருக்க விரும்பினால், வங்கிக் கிளைக்குச் சென்று உடனடியாக KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் ஜூன் மாதம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், ஏராளமான வங்கி கணக்குகள் செயலற்ற நிலையில் இருப்பதால், அந்த கணக்குகள் மூடப்படுவதாகத் தெரிகிறது.
இந்த கணக்குகள் மூடப்படாது: அதே சமயம், டிமேட் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட கணக்குகள், லாக்கர்கள், 25 வயதுக்குட்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட மாணவர்களின் கணக்குகள், சிறுவர்களின் வங்கிக் கணக்குகள் மூடப்படாது.
மேலும், PMJJBY/PMSBY/SSY/APY, DBT போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக திறக்கப்பட்ட கணக்குகள் மற்றும் வருமான வரித்துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளால் முடக்கப்பட்ட கணக்குகள் அல்லது வேறு ஏதேனும் சட்டபூர்வ அதிகாரிகளால் முடக்கப்பட்ட கணக்குகள் மூடப்படாது.
உங்கள் வங்கி கணக்கு மூடப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?:
உங்களது பஞ்சாப் நேஷனல் வங்கி கணக்கு மூடப்பட்டிருந்தால், அக்கவுன்ட்டை மீண்டும் செயல்படுத்த கேஓய்சி (KYC) ஆவணங்களை உங்கள் அருகிலுள்ள வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்காக அடையாளச் சான்று (பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் இவைகளில் ஏதேனும் ஒன்று) மற்றும் முகவரி ஆதாரம் (ஆதார் கார்டு, மின்சார பில், தண்ணீர் பில், வீட்டு வரி போன்றவற்றில் ஏதேனும் ஒன்று) ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications