நிலம், வீடு வைத்திருப்போருக்கு அறிவிப்பு.. அசல் ஆவணம் இருக்கா? நிலுவையை செலுத்தி ரத்தை தவிர்க்கலாம்
சென்னை: வீட்டு வசதி வாரிய கே.கே.நகர் கோட்டத்துக்கு உட்பட்ட திட்டப் பகுதிகளில் குடியிருப்பு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்காகவே முக்கிய அறிவுரையை வழங்கியிருக்கிறார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே பிரத்யேக செய்திக்குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமானது, நலிந்த மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த, நடுத்தர, உயர் வருவாய் என, பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வீடு, மனைகளை ஒதுக்கி வருகிறது.. வீடுகளை ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான தொகையை தவணை முறையில் செலுத்தி வர வேண்டும்.

மாதத்தவணை திட்டம், மொத்த கொள்முதல் திட்டம் மற்றும் சுயநிதி திட்டம் போன்றவற்றின் அடிப்படையில் இந்த வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அப்படி குடியிருப்புகளுக்குரிய முழுத்தொகையும் செலுத்திய பிறகு, கிரயப்பத்திரமும் உரிமையாளர்களுக்கு உடனுக்குடன் வழங்கப்பட்டுவிடும்..
வட்டிக்கு வட்டி: ஒருவேளை, முழு பணத்தையும் செலுத்தியிருந்தும்கூட, விற்பனை பத்திரத்தை பெறாதவர்கள், நிலுவைத்தொகை உள்ளவர்கள் விரைவாக விற்பனை பத்திரம் பெறும்வகையில், செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.. ஒருவேளை உரிய காலத்தில் தவணை தவறினால், வட்டிக்கு வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
எனினும், தவணை தொகையை வசூலிப்பதில், வாரியத்துக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது. அத்துடன், நிலுவைத் தொகையை பலரும் செலுத்ததால், வாரியத்துக்கு வர வேண்டிய வருவாய் நிலுவையும் பல மடங்காக உயர்ந்துவிட்டதாக கூறப்பட்டது. எனவே, "அபராத வட்டி தள்ளுபடி திட்டம்" கொண்டுவரப்பட்டது. இதை பயன்படுத்தி, சலுகைகளுடன் நிலுவைத் தொகையை செலுத்தியவர்களுக்கு, விற்பனை பத்திரம் வழங்க, வாரியம் நடவடிக்கை எடுத்தது.
வாரியம் உத்தரவு: ஆனால், இந்த சலுகையை அறிவித்தும்கூட, 1,500க்கு மேற்பட்டோர் தவணை செலுத்தாமல் இருப்பதாக கடந்த வாரம்கூட செய்திகள் வெளியாகியிருந்தன. எனவே, இவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க, வாரியம் உத்தரவிட்டிருப்பாகவும் தெரிகிறது.
இப்படிப்பட்ட சூழலில், வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவையை செலுத்தி ரத்தை தவிர்க்கலாம் என்று சென்னை ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார்.
அறிவுரை: குறிப்பாக வீட்டு வசதி வாரிய கே.கே.நகர் கோட்டத்துக்கு உட்பட்ட திட்டப் பகுதிகளில் குடியிருப்பு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்காகவே பிரத்யேக அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
"தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், கே.கே.நகர் கோட்டத்துக்கு உட்பட்ட அரும்பாக்கம், கே.கே.நகர். மதுரவாயல், அசோக் நகர், எம்டிபி திட்டம், ராஜா அண்ணாமலைபுரம், விசாலாட்சி தோட்டம், மாந்தோப்பு காலனி, 144-ராமாபுரம், 16-வளசரவாக்கம், 428-புலியூர், பழைய ராமாபுரம், சிஐடி நகர் மேற்கு, நெசப்பாக்கம், 384-ராமாபுரம், 48-புலியூர், மரவேலைப் பிரிவு திட்டம் ஆகிய திட்டப் பகுதிகளில் வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்களில் பலர் வாரிய விதிகளின்படி தொகை திருப்பிச் செலுத்தும் காலம் முடிவுற்றும், தமிழக அரசு வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அறிவித்தும் நீண்ட காலமாக நிலுவைத் தொகையை செலுத்த முன்வரவில்லை.
அசல் ஆவணங்கள்: ஆகையால், ஒதுக்கீடுதாரர்கள் இந்த அறிவிப்பைக் கண்டவுடன் தங்களிடம் உள்ள ஒதுக்கீடு ஆணை, தொகை செலுத்திய ரசீது மற்றும் ஒதுக்கீடு தொடர்பான அசல் ஆவணங்களுடன் கே.கே.நகர் கோட்ட அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொள்ளலாம். கணக்கை நேர் செய்து நிலுவைத் தொகைகளையும் அப்போது செலுத்த வேண்டும். மேலும், வாரிய விதிமுறைகளின்படி கிரயப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்யும் நடவடிக்கையைத் தவிர்க்கலாம்" என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications