ஜிகே வாசன் போல நமக்கும் பாஜக தரும்.. அதிமுக வேண்டாம்- அலைபாயும் 'டாக்டருக்கு' நெருக்கடி தந்த மகன்!
சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக பக்கம் நகர்ந்த புதிய தமிழகம் கட்சி தற்போது மீண்டும் பாஜக பக்கமே போவது என முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடந்த சில ஆண்டுகளாக படுதீவிரமாக பாஜகவை ஆதரித்து வந்தார். பாஜகவினரை விட தீவிரமாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை பேசினார். பாஜக, ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தமிழ்நாடு வாய்ஸ் ஆக உருமாறி இருந்தார்
டாக்டர் கிருஷ்ணசாமி.

தென்காசி நம்பிக்கையில் டாக்டர் கிருஷ்ணசாமி: அண்ணா திமுக- பாஜக கூட்டணி இருந்த போது தென்காசி லோக்சபா தொகுதி தமக்கு கிடைக்கும் என மலைபோலவும் நம்பி இருந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. தென்காசி தொகுதியில் 1998-ம் ஆண்டு தொடர்ந்து இடைவிடாமல் போட்டியிட்டு தோல்வியையே தழுவி வருகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. இம்முறை பாஜக- அதிமுக ஆதரவுடன் எப்படியாவது எம்பியாகிவிடுவது என கனவில் இருந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆனால் பாஜகவுடனான உறவை அதிமுக துண்டித்த போது தடுமாறிப் போய்விட்டார் டாக்டர். பாஜக- அதிமுகவுக்கு இடையே பொதுவான நபராக எப்படியும் இந்த கூட்டணி மீண்டும் துளிர் விடும் என பெரும் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனாலும் டாக்டர் கிருஷ்ணசாமியின் நம்பிக்கை கை கூடவில்லை.
அதிமுக ஆதரவு நிலை: மேலும் பாஜகவும் டாக்டர் கிருஷ்ணசாமியை தவிர்க்க தொடங்கிவிட்டது. டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட காத்திருந்த தென்காசி லோக்சபா தொகுதியை பாஜக தர மறுத்தது. அத்துடன் பாஜக வேறு ஒரு வேட்பாளரையும் களமிறக்க பணிகளையும் தொடங்கிவிட்டது. இதனால் வெறுத்துப் போன டாக்டர் கிருஷ்ணசாமி பாஜகவுக்கு எதிராக பேசத் தொடங்கினார். அப்படியே அதிமுக பக்கம் சாயவும் தொடங்கினார்.
குடும்பத்தில் புகைச்சல்: ஆனால் டாக்டர் கிருஷ்ணசாமியின் போக்கு அவரது குடும்பத்திலேயே புகைச்சலை உருவாக்கிவிட்டதாம். டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும் புதிய தமிழகம் கட்சியின் வருங்காலமுமாகிய டாக்டர் ஷ்யாம், அப்பாவின் அதிமுக ஆதரவு போக்கை கொஞ்சமும் ரசிக்கவில்லையாம். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தொடர்ந்து பாஜகவை ஆதரித்ததால் அவருக்கு ராஜ்யசபா சீட் கிடைத்தது. அதேபோல பாஜகவையே எவ்வளவு நடந்தாலும் தொடர்ந்து ஆதரிப்போம்; தென்காசியை விட்டுக் கொடுத்து ஜிகே வாசன் பாணியில் ஒரு ராஜ்யசபா சீட் கேட்போம். அதனால் அதிமுக பக்கம் சாயவே கூடாது என கண்டிஷனாக சொன்னாராம். இதனால் தற்போது அதிமுக ஆதரவு நிலையும் இல்லாமல் பாஜக பக்கமும் போகாமல் அமைதி காத்துக் கொண்டிருக்கிறாராம் டாக்டர் கிருஷ்ணசாமி!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications