எடப்பாடியிடம் அதிமுக கட்சி இருக்கிறதா? ரகுபதி பரபரப்பு பேட்டி! ஈரோடு தேர்தலில் நடந்த "ஓட்டு ஷிப்ட்?"
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவினர் ஓட்டும் திமுகவிற்குதான் கிடைத்துள்ளது என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8-ஆம் தேதி எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் திமுக சார்பில் சந்திரக்குமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக 1,15,709 வாக்குகளை பெற்றது. அது போல் நாம் தமிழர் கட்சி 24,151 வாக்குகளை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடாததால் அவர்களது தொண்டர்கள் யாருக்கு வாக்களித்திருப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது.
இதற்காகத்தான் கடந்த 2025 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் வாக்குகளை ஒப்பிட்டு திமுகவினர் ஒருசில தகவல்களை பரப்பி வந்தனர். அதன்படி ஈரோடு கிழக்கில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 86,646 வாக்குகளை பெற்றுள்ளார். அது போல் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 34,817 வாக்குகளை பெற்றுள்ளார்.
மேலும் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் விஜயகுமார் 12784 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகம் 12,802 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
அந்த வகையில் மக்களவை தொகுதியில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்குள்பட்ட பகுதியில் திமுக பெற்ற வாக்குகளையும் அதிமுக பெற்ற வாக்குகளையும் சேர்த்தால் 1,21,463 வாக்குகள் வருகின்றன. இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சந்திரகுமார் பெற்ற 1,15,709 வாக்குகளுக்கு கிட்டதட்ட வந்துவிடுகின்றன.
அது போல் மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் பெற்ற வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளையும் சேர்த்தால் 25,586 வருகின்றன. இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக சீதாலட்சுமி பெற்ற 24,151 வாக்குகளுக்கு கிட்டதட்ட வந்துவிட்டது. இதை நாம் தமிழர் கட்சி பல்வேறு டிவி விவாதங்களில் மறுத்து வந்தது.
அதாவது கடந்த முறை நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவை "எங்களுக்கு ஆதரவு தருமாறு" நாங்கள் கேட்டும் எங்களுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்பதை அனைவரும் அறிவர். அது போல் "பாஜக வாக்கும் எங்களுக்கு வந்துவிட்டதாக சிலர் சொல்கிறார்கள்.
"ராமரும் வேண்டாம், ராமசாமியும் வேண்டாம்" என எங்கள் தலைவர் சீமான் கூறியுள்ளார். எனவே ராமரை பற்றி பேசியதால் எங்களுக்கு பாஜக ஓட்டு எப்படி கிடைக்கும். மக்கள் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க தொடங்கிவிட்டனர். ஆளும் கட்சியின் பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்பவில்லை" என நாதக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளரான பிறகு 11 தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளார். அவரிடம்தான் கட்சி இருக்கிறதா என்பதை முன்னாள் அமைச்சர்கள் பேசும் பேச்சுகளில் தெரிகிறது. அதிமுகவை கட்டுப்பாட்டில் கொண்டு வரவே எடப்பாடி பழனிசாமி படாதபாடுபட்டு வருகிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவினர் ஓட்டும் திமுகவிற்குத்தான் கிடைத்துள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இத்தனை நாட்களாக திமுக ஐடி விங் நிர்வாகிகள் சோசியல் மீடியாவில் கூறி வந்த நிலையில் தற்போது அமைச்சர் ஒருவரே இது போன்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications