சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அரசில் தமிழகத்திற்கு சிறப்பு பங்கு இருக்க வேண்டும்.. ராகுல் காந்தி பேச்சு!

மத்திய அரசில் தமிழகத்திற்கு சிறப்பு பங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசில் தமிழகத்திற்கு சிறப்பு பங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

லோக்சபா தேர்தல் அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் தமிழகம் வந்து இருக்கிறார்.

இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். இதையடுத்து சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

வடஇந்தியாவை விட தென்னிந்தியா சூப்பர்.. பெண்களை இங்கு மதிக்கிறார்கள்.. ராகுல் பாராட்டு! வடஇந்தியாவை விட தென்னிந்தியா சூப்பர்.. பெண்களை இங்கு மதிக்கிறார்கள்.. ராகுல் பாராட்டு!

கேள்வி பதில்

கேள்வி பதில்

ராகுல் காந்தி தனது உரையில், நான் இப்போது இவ்வளவு பேர் முன்னிலையில் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 3000 பேர் இப்படி கேள்வி கேட்டால் அவர் பதில் அளிப்பாரா?. மோடி ஒரே ஒருமுறை இப்படி கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளாரா?. இத்தனை பெண்கள் மத்தியில் அவரால் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியுமா?. அவரால் முடியாது.

பிரதமரை தேர்வு செய்யுங்கள்

பிரதமரை தேர்வு செய்யுங்கள்

பிரதமரை தேர்வு செய்வதில் தென்னிந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய அரசில் அனைத்து மாநிலத்திற்கும் பங்கு இருக்க வேண்டும். மத்திய அரசில் தமிழகத்திற்கு சிறப்பு பங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

தமிழகம் வளர வேண்டும்

தமிழகம் வளர வேண்டும்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் தருவோம். தமிழக மக்கள் அன்புக்கு மரியாதை செலுத்தும் மக்கள். இந்த நாடு இணைந்து வளர வேண்டும். நாம் எல்லோரும் ஒன்றாக வேறுபாடு இன்றி சேர்ந்து வளர வேண்டும்.

சண்டை குறைய வேண்டும்

சண்டை குறைய வேண்டும்

நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது ஊழல். இந்துக்கள் இஸ்லாமியர்களுடன் சண்டையிடுகிறார்கள். வடஇந்தியா தென்னிந்தியாவுடன் சண்டையிடுகிறது. இந்தியாவில் எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Rahul Gandhi: How many of you have had the opportunity to ask him 'Mr Prime Minister what do you think about education? What do you think about this? What do you think about that?' Why doesn't Prime Minister have the guts to stand in front of 3000 women & be questioned by them?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X