சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் இருந்து தமிழக அரசு இயக்கப்படுவது தமிழர்களுக்கு அவமானம்- ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லியில் இருந்து தமிழக அரசு இயக்கப்படுவது தமிழர்களுக்கு அவமானம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

நாகர்கோவிலில் இன்று பிற்பகல் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம் வந்துள்ளார் ராகுல்காந்தி. அவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Rahul Gandhi says its a shame for TN as it was operated from Delhi

அவர் கூறுகையில், தமிழகம் உட்பட பல மாநில கலாச்சாரங்கள் பாஜக அரசால் சீரழிக்கப்பட்டுள்ளன. நாக்பூரை தலைமையிடமாக கொண்டு மத்திய அரசு இயங்க முடியாது.

தமிழகம் சீனாவுடன் போட்டியிடும் அளவுக்கு உற்பத்தி துறையில் திறமை காண்பித்துள்ளது. தமிழகத்தை இந்தியாவின் உற்பத்தி துறை மையமாக காங். ஆட்சிக்கு வந்ததும் மாற்றிக் காட்டுவோம்.

"நமக்கு நாமே" ஸ்டாலின் ஸ்டைல்.. தொள தொள ஜிப்பாவுக்கு பதில் ஃபிட்டான டி சர்ட்டில் "மிஸ்டர் ஹேண்ட்சம்"

மாநிலங்கள் நடுவே வேற்றுமை பாராட்டுவதுதான் தேச விரோதம். அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில்தான் எனக்கு விருப்பம். பஞ்சாயத்து முதல் பிரதமர் வரை அதிகாரங்கள் பகிர்வு என்பதே எனக்கு விருப்பம்.

தமிழக அரசு டெல்லியிலிருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. டெல்லியிலிருந்து தமிழக அரசு இயக்கப்படுவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் என்றார் ராகுல் காந்தி.

English summary
Congress President Rahul Gandhi says that its a shame for Tamilnadu people as their government was being operated by Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X