ராகுலை அதிரவைத்த புகார்கள்... கே.எஸ்.அழகிரியுடன் தினேஷ் குண்டுராவையும் தூக்கியடிக்க முடிவு?
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் மீது அதிரவைக்கும் புகார்கள் குவிந்ததால் இருவரையும் மாற்ற டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் ஆகியோர் மீது ராகுல் காந்திக்கு தொடர்ச்சியாக சென்ற புகார்கள் மீது காங்கிரஸ் தலைமை விசாரணை நடத்தி இருக்கிறது. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலின் போது நடந்த பல வில்லங்கங்கள்தான் அத்தனை புகார்களின் சாரம்சமாக இருந்ததாம்.
மேலும் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட புகார்களில் கூறப்பட்ட அனைத்து வில்லங்கங்களும் உண்மை என விசாரித்ததில் தெரியவந்ததாம். இதனை விலாவாரியாக ரிப்போர்ட்டாக ராகுல்காந்தியிடம் கொடுத்திருக்கின்றனர்.
அப்பதான் அவைக்கு வந்தார் சபாநாயகர் செல்வம்.. நெஞ்சுவலியால் ஐசியூவில் அனுமதி.. நலம் விசாரித்த ஆளுநர்.

ராகுல் அதிர்ச்சி
ஒரு மாநில கமிட்டியின் தலைவரும் மேலிடப் பொறுப்பாளரும் இத்தனை வில்லங்கங்களை அரங்கேற்ற முடியுமா? என அதிர்ச்சியடைந்தாராம் ராகுல். இதனால் விரைவில் அழகிரியுடன் தினேஷ் குண்டுராவையும் மாற்றுவது என முடிவு செய்துவிட்டனராம். இந்த தகவல் அழகிரிக்கும் பாஸ் செய்யப்பட்டிருக்கிறதாம்.

திமுக தலைமை
அதேநேரத்தில் தமக்கு எதிராக திமுக தலைமையும் டெல்லி மேலிடத்தில் போட்டுக் கொடுத்தது என்கிற தகவலைத்தான் அழகிரி தரப்பால் ஜீரணிக்க முடியவில்லையாம். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற டெல்லியில் உள்ள தனது லாபியை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார் அந்த எம்.பி. திமுகவில், முதல்வர் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருக்கும் அமைச்சர் உதவியுடன் இந்த லாபியை நடத்தி வருகிறாராம் அந்த எம்.பி. அமைச்சரின் நச்சரிப்பு தாங்காமல்தான் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திலும் திமுக தலைமை, அழகிரி மீது புகார் பட்டியல் வாசித்ததாம்.

நம்பிக்கையில் பவன் உலா
இதனிடையே அந்த லாபி எம்.பி, அண்மைக்காலமாக அடிக்கடி சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து போகிறாராம். அவரைப் பொறுத்தவரையில் எப்பவுமே சத்தியமூர்த்தி பவனுக்கு வருவதை கவுரவ குறைச்சலாக கருதுகிறவர். விரைவில் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில்தான் சத்தியமூர்த்தி பவனுக்கு அடிக்கடி வந்துபோகிறாராம் அந்த எம்.பி. சத்தியமூர்த்தி பவனில் எந்த மீட்டிங்க் போடப்பட்டாலும் அதில் தவறாமல் கலந்துகொள்கிறாராம்.

ரேஸில் யார்?
தமிழக காங்கிரஸ் தலைவருக்கான ரேஸில் கார்த்தி சிதம்பரம், மாணிக் தாகூர், திருநாவுக்கரசர், செல்லக்குமார், விஷ்ணு பிரசாத், ஜோதிமணி என எம்.பிக்கள் முட்டி மோதுகின்றனர். தற்போதைய நிலையில் கார்த்தி சிதம்பரம் ரேஸில் முந்துகிறார். அவருக்கு கிடைக்காமல் போனால் மாணிக் தாகூருக்குக் கிடைக்கலாம். திமுக லாபியுடன் கனவில் மிதக்கும் அந்த எம்.பிக்கு வாய்ப்பே இல்லை என்கிற தகவலும் வலம் வருகிறது.

செல்வப்பெருந்தை மீது அதிருப்தி?
இந்த நிலையில் தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை, யாரையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லையாம். எதுவாக இருந்தாலும் தன்னை கேட்டுவிட்டே செய்ய வேண்டும் என சொல்கிறாராம். இது குறித்து, செல்வபெருந்தகைக்கு எதிராக டெல்லிக்கு புகார் அனுப்பி வருகிறார்களாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்












Click it and Unblock the Notifications