Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? பண்டிகைக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை துவங்குகிறது.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், ரயில்வே நிர்வாகம், ரிசர்வேஷன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இது பொதுமக்களுக்கு பெருத்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது.

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம்.

இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது... ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களையும் இயக்கி வருகிறது.

Railway News Train ticket booking for pongal festival starts from tomorrow 13th September ends on September 19

சுபமுகூர்த்தம்: சமீபத்தில்கூட, ஆவணி சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தது.. அது முடிந்ததுமே, ஓணம் பண்டிகை நெருங்கிவிட்டது.. பண்டிகை நேரத்தில், போக்குவரத்துகளில் அதிக கூட்டம் இருக்கும் என்பதால், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை அறிவித்திருந்தது.

விரைவில் பொங்கல் பண்டிகை வருகிறது.. அதாவது, ஜனவரி 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை போகி பண்டிகை தொடங்குகிறது.. ஜனவரி 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது...

தமிழக மக்களின் மிக மிக முக்கியமான பண்டிகை என்பதால், பொதுமக்களின் சேவையை கருத்தில் கொண்ட, சொந்த ஊர்களுக்குச் செல்வோர்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவுகள் முன்கூட்டியே தொடங்குகிறது. அதன்படி, நாளைய தினம், செப்டம்பர் 13ம் தேதி முதல் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி அறிவிப்பு: ரயில்வேயை பொறுத்தவரை, 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. எனவே, ஜனவரி 11-ம் தேதி பயணம் செய்ய நாளையும், ஜனவரி 12-ம் தேதிக்கு செப்டம்பர் 14-ம் தேதியிலும், ஜனவரி 13-ம் தேதிக்கு செப்டம்பர் 15-ம் தேதியிலும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். அதனால், பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை மாலையில் ஜனவரி 12-ம் தேதி முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பானது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.. ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.. இதில், ஐஆர்சிடிசி வெப்சைட் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுன்டர்களிலோ முன்பதிவு செய்யலாம்.

சிறப்பு ரயில்கள்: இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இருப்பதால், முன்கூட்டியே சிலர் பொங்கலுக்கு ஊருக்கு செல்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வாய்ப்புள்ள விரைவு ரயில்களில் ஓரிரு பெட்டிகள் கூடுதலாக இயக்கவும் முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+