ரயில் தட்கல் டிக்கெட் புக்கிங்கில் நடந்த மாற்றம்.. பயணிகளை நிம்மதி பெருமூச்சு விட வைத்த நியூ அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஆர்சிடிசி இணையதளம் அப்டேட் வெர்ஷன் பயன்பாட்டுக்கு வந்த 15 நாட்களில் தட்கல் முன்பதிவு வேகம் 5 சதவீதம் அதிகரித்து இருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு எளிமைப்படுத்தும் விதமாக ஐஆர்சிடிசி தனது இணையதளத்தை மேம்படுத்தியது.

பயணிகள் விரைவாக டிக்கெட் புக்கிங் செய்வதை உறுதி செய்யும் விதமாக சர்வர்கள் மேம்படுத்தப்பட்டு ஒரு நிமிடத்திற்கு புக் ஆகும் டிக்கெட்டுகளும் எண்ணிக்கையும் 1.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. பீட்டா வெர்ஷன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், 15 நாட்களில் தட்கல் டிக்கெட் புக்கிங் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரயில்வே கூறியுள்ளது.

Railway Tatkal Ticket Booking Change New Update Brings Relief to Passengers

5 சதவீதம் அதிகரித்துள்ளது

புதிய வெர்ஷனில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் இருந்த குளறுபடிகள் பலவும் மாற்றப்பட்டன. ஒரே திரையில் எளிதாக புக்கிங் செய்யும் விதமாக மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதேபோல, தேவையற்ற பயனர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். முறைகேடாக டிக்கெட் செய்பவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டன. பயணிகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் தட்கல் முன்பதிவு தொடங்கிய 3 நிமிடத்திற்குள் 5 சதவீதம் வரை டிக்கெட் முன்பதிவு உயந்து இருப்பதாக ரயில்வே கூறியுள்ளது. இதற்கு முன்பு ஒரு நிமிடத்திற்கு 32 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. முதல் ஐந்து நிமிடத்தில் டிக்கெட் புக்கிங் 3 சதவீதம் கூடிய நிலையில், 30 நிமிடத்தில் 2 சதவீதம் கூடியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 5 சதவீதம் முன்பை விட அதிகரித்து இருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

புதிய இணையதளத்தில் என்னென்ன மாற்றங்கள்

ஒட்டு மொத்தமாக ஆன்லைன் புக்கிங் தற்போது இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 89.84 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது உள்ள புதிய மேம்பட்ட இணையதளத்தில் விரைவாக டிக்கெட் புக் செய்ய முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஐஆர்சிடிசியின் புதிய இணையதளத்தில், வெறும் டிசைன் மாற்றம் மட்டுமின்றி புக்கிங் நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டன. புதிய இணையதளத்தில் எந்த இருக்கை தேவை என்பதை நாமே தேர்வு செய்ய முடியும். எடுத்துக்காட்டாக வயதானவர்கள் இருந்தால் கீழ் படுக்கையை முன்னுரிமை செய்து புக் செய்து கொள்ள முடியும். ரயிலில் இருக்கும் ஏசி முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு ஏசி, 3-ம் வகுப்பு ஏசி, சேர்கார் ஏசி, சாதாரண இருக்கை, படுக்கை வசதி ஆகியவற்றில் எத்தனை இடங்கள் காலியாக இருக்கின்றன என்பதை ஒரே திரையில் காண முடியும்.

மேலும் சில அப்டேட்கள்

டிக்கெட் முன்பதிவின்போது ஏற்படும் இடையூறுகளான பாப்-அப்கள் மற்றும் அடிக்கடி கேப்சா பதிவிடுவது, ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் எளிதாக டிக்கெட் முன்பதிவை செய்ய முடியும். அடிக்கடி டிக்கெட் புக் செய்பவராக இருந்தால் பயணி தன்னுடைய பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்டவற்றை சேமித்து வைக்க முடியும்.

இதனால் அடுத்த முறை டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, மீண்டும் விவரங்களைக் குறிப்பிடாமல் விரைவாக முன்பதிவு செய்ய இயலும் இதுபோன்ற வசதிகள் புதிய வெர்ஷனில் கொடுக்கப்பட்டுள்ளன. பயணிகள் அளிக்கும் கருத்துகளை பெற்று இதில் மேலும் சில அப்டேட்களை கொண்டு வர ரயில்வே திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+