சென்னையை குறிவைக்கும் மழை..3 நாட்களுக்கு மிக கவனம்.. புயலாக மாறாது..பாலச்சந்திரன் சொன்ன குட் நியூஸ்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக நாளைய தினம் சென்னையில் கனமழையும் 11 மற்றும் 12ஆம் தேதியன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 13ஆம் தேதி ஓரிரு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்.
இதன் காரணமாக இன்று ஒரு சில இடங்களிலும் 10ஆம் தேதி அநேக இடங்களிலும் 11,12,13ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பாலச்சந்திரன் பேட்டி
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்காலில் 6 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் அதே நேரத்தில் அது புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

படிப்படியாக அதிகரிக்கும் மழை
9ஆம் தேதி ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 10ஆம் தேதி அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 11 மற்றும் 12ஆம் தேதி பெரும்பாலான இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மிக கனமழை படிப்படியாக அதிகரிக்கும்.

புயலாக மாறாது
வட கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி பரவியிருப்பதால் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு. புயல் பற்றி தற்போது கணிப்பு எதுவும் இல்லை என்றும் பாலச்சந்திரன் கூறினார்.

சென்னையில் அதிக மழை
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 09ஆம் தேதி வரைக்கும் பதிவான மழையின் அளவு 238 மில்லி மீட்டர். இந்த கால கட்டத்தின் இயல்பான அளவு 244 மில் மீட்டர். இது 2 சதவிகிதம் குறைவாகும். சென்னையைப் பொருத்தவரைக்கும் அக்டோபர் முதல் நவம்பர் 8ஆம் தேதி வரைக்கும் பதிவான மழையின் அளவு 46 செமீ இந்த கால கட்டத்தில் இயல்பான அளவு 40 செமீ. இது இயல்பை விட 13 செமீ அதிகமாகும்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications