ராஜபாளையம் தொகுதியை குறி வைத்த நடிகை கவுதமி.. எதிர்க்கும் ராஜேந்திர பாலாஜி! எடப்பாடி ஆதரவு யாருக்கு?
சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட நடிகை கவுதமி விருப்ப மனு கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நடிகை கவுதமிக்கு பதிலாக தனது ஆதரவாளருக்கு சீட் பெற்று கொடுக்க வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறார்.
அதிமுகவில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வரும் சூழலில், நடிகை கவுதம் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போதே நடிகை கவுதமி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி இருந்தார்.

அப்போது பாஜகவில் இருந்த கவுதமிக்கு ராஜபாளையம் தொகுதி பொறுப்பு அளிக்கப்பட்டது. விருதுநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜபாளையம் தொகுதியில் கவுதமி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்பட்டது. ஆனால் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தொகுதி பங்கீட்டின் போது ராஜபாளையம் தொகுதி அதிமுக வசம் சென்றது.
இதனால் ஏமாற்றம் அடைந்த நடிகை கவுதமி, பின்னர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமிக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுக்கூட்டங்களில் பங்கேற்று நடிகை கவுதம் பங்கேற்று பேசி வருகிறார்.
இந்த நிலையில் நடிகை கவுதமி மீண்டும் ராஜபாளையம் தொகுதியை குறி வைத்துள்ளார். அதற்கேற்ப இம்முறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் தொகுதி மாற முடிவு செய்திருக்கிறார். மீண்டும் சிவகாசி தொகுதியில் போட்டியிடும் முடிவில் உள்ள ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் தொகுதியில் தனது ஆதரவாளரை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதற்கேற்ப விருதுநகரில் நடக்கும் அதிமுக நிகழ்ச்சிகளில் ராஜேந்திர பாலாஜி நடிகை கவுதமியை பங்கேற்க அழைப்பதில்லை. இன்னொரு பக்கம் பாஜக பக்கம் ராஜபாளையம் தொகுதியை தள்ளிவிடும் முடிவிலும் அதிமுக இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி ராஜபாளையம் தொகுதி பாஜகவுக்கு அளிக்கப்பட்டால், முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல் பாமக பொருளாளரான திலகபாமாவும் விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட ஆழம் பார்த்து வருவதாக கூறப்படுகிறது. சமூக ரீதியிலான வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும் என்று திலகபாமா நம்புவதால், ராஜபாளையம் தொகுதி யாருக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி!












Click it and Unblock the Notifications