வெலவெலத்த விருதுநகர்.. ராஜேந்திர பாலாஜி Vs மாஃபா பாண்டியராஜன்! உள்குத்து அரசியலால் அதிமுகவில் அதகளம்
சென்னை: 2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. கட்சிகளுக்கு இடையே மோதல் என்பதை தாண்டி கட்சிகளுக்கு உள்ளேயே மோதல் வந்திருக்கிறது. அந்த வகையில் விருதுநகரில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் இடையே மீண்டும் முட்டல் மோதல் எழுந்திருக்கிறது. போட்டியிட்டால் விருதுநகரில் தான் போட்டியிடுவேன் என உறுதியாக சொல்லி இருக்கிறார் மாஃபா பாண்டியராஜன்.
2021 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா வரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இருக்கும் கூட்டணியை வலுப்படுத்துவது, புதிய கூட்டணியை உருவாக்குவது என அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. மேலும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக போராட்டம், ஆர்ப்பாட்டம், மாநாடு என பிரம்மாண்டமாக அரங்கேறி வருகின்றன.
ராஜேந்திர பாலாஜி
பிற கட்சிகளுக்கு இடையே தான் போட்டி என்றால், சில கட்சிகளில் கட்சிகளுக்குள்ளேயே போட்டி இருக்கிறது. முன்னாள் அமைச்சர்களும், இந்நாள் அமைச்சர்களும் தங்கள் எதிரிகளை தங்கள் கட்சியிலே இருந்தாலும் தூக்கி அடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் பிரபலமான தொகுதியான விருதுநகர் அரசியலில் கடந்த சில தினங்களாகவே பரபரப்பு நிலவுகிறது. முன்னாள் அமைச்சர்களான ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜனுக்கு இடையே இருக்கும் பஞ்சாயத்து தான் விருதுநகரில் ஹாட் டாபிக்.
மாஃபா பாண்டியராஜன்
2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் நின்று வெற்றி பெற்றவர் மாஃபா பாண்டியராஜன். தொடர்ந்து விஜயகாந்தின் மீது அதிருப்தி அடைந்த அவர் அதிமுகவில் இணைந்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆர்பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜியும் அமைச்சர்கள் ஆனார்கள். இதற்கிடையே சென்னைக்கு தனது அரசியலை மாற்றினார் மாஃபா. 2021 தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதிமுக மோதல்
அதே நேரத்தில் திருமங்கலத்தில் ஆர்பி உதயகுமார், விருதுநகரில் ராஜேந்திர பாலாஜியும் வெற்றி பெற்றனர். இதனால் அவர்கள் அந்தந்த தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். சிவகாசியில் இந்த முறை ராஜேந்திர பாலாஜி போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது. இதற்கிடையே விருதுநகரில் வீடு கட்டி குடியேறி இருக்கும் மாஃபா பாண்டியராஜன் தனது பழைய ஆதரவாளர் வட்டத்தை திரட்டி வருகிறார். இதனால் அதிருப்தி அடைந்த ராஜேந்திர பாலாஜி தனக்கு போட்டியாக ஒருவர் வந்துவிடக்கூடாது என பொதுக்கூட்டங்களிலேயே பாண்டியராஜனை வெளிப்படையாக விமர்சித்து பேசியது அதிமுகவில் பரபரப்பு ஏற்படுத்தியது
2026 தேர்தல்
கடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிடலாம் என பாண்டியராஜன் நினைத்த நிலையில் அதிமுக தலைமையிடம் பேசி தேமுதிகவுக்கு ஒதுக்க வைத்தார் ராஜேந்திர பாலாஜி. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் விருதுநகரில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார் மாஃபா பாண்டியராஜன். ஆனால் அவருக்கு போட்டியாக கௌதமியை களம் இறக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக விருதுநகர் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க தயாராகி வருகிறார் ராஜேந்திர பாலாஜி. அதே நேரத்தில் போட்டியிட்டால் விருதுநகரில் தான் என தீர்மானமாக முடிவெடுத்து தனது ஆதரவாளர்களை தயார்படுத்தி வருகிறார் மாஃபா பாண்டியராஜன்.












Click it and Unblock the Notifications