கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு.. டிவிட்டரில் ரஜினி ஆறுதல்
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் ரஜினி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் சொல்லி உள்ளார்.
தமிழகத்தில் யாருக்கு எந்த பாதிப்பு என்றாலும் பெரும்பாலும் ரஜினி நேரில் போய் ஆறுதல் சொல்லுவதே கிடையாது. அது தன்னுடைய ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தாலும் சரி!

மன்ற உறுப்பினர்களை வருஷத்துக்கு ஒருமுறை பார்ப்பதே நிறுத்தி வைத்திருந்த ரஜினி, பாதிக்கப்பட்ட சாமான்ய மக்களை சந்திப்பது கிடையாது. வேண்டுமானால் ஆறுதல் சொல்லியோ, எதிர்தரப்பினரை கண்டனம் தெரிவித்தோ ஒரு அறிக்கை வந்து சேரும். அவ்வளவுதான்...
அதனால்தான் திடீரென்று ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நேரில் போக போய், அங்கே ரஜினிக்கு ஏற்பட்ட அனுபவம் ஆகட்டும், தூத்துக்குடியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்து செய்தியாளர்களிடம் பேசியது வரை என்றைக்குமே யாராலும் மறக்க முடியாது.
இந்நிலையில் ரஜினிகாந்த் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லியுள்ளார். வழக்கம்போல் ட்விட்டரில்தான் இந்த ஆறுதல் வந்திருக்கிறது. அதுவும் 2 வரிகளில் அந்த ஆறுதல் பதிவு பதியப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்துவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறேன். நமது நிவாரண உதவிகள் தொடரட்டும்.
— Rajinikanth (@rajinikanth) November 16, 2018
டுவிட்டர் பக்கத்தில், 'கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு. நமது நிவாரணப்பணிகள் தொடரட்டும்' இவ்வாறு ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications