அண்ணாத்த படக்குழுவினருடன் விமானத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினிகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் அண்ணாத்த படக்குழுவினருடன் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை நேற்று கேக் வெட்டி கொண்டாடினார்.

Recommended Video

    அண்ணாத்த படக்குழுவினருடன் விமானத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினிகாந்த் - வீடியோ

    ரஜினிகாந்த் தனது 70 ஆவது பிறந்தநாளை கடந்த 12-ஆம் தேதி கொண்டாடினார். அடுத்த ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கவுள்ள ரஜினி தான் ஒப்புக் கொண்டுள்ள அண்ணாத்த படத்தை முடித்து கொடுக்க முழுவீச்சில் உள்ளார்.

    Rajinikanth cuts Birthday cake in spicejet

    இதற்காக இரு நாட்கள் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக நேற்று தனது மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்கு விமானம் மூலம் புறப்பட்டார்.

    ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் அவர் பயணம் செய்த போது அந்த நிறுவனம் சார்பில் ரஜினியின் பிறந்தநாளை கொண்டாட விரும்பினர். இதையடுத்து அந்த நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கேக்கை வெட்டி ரஜினி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    விமான பணிப்பெண்களும் விமான ஊழியர்களும் ரஜினிக்கு வாழ்த்து அட்டைகளை கொடுத்தனர். உடன் நடிகை நயன்தாரா, ரஜினி மகள் ஐஸ்வர்யா ஆகியோர் இருந்தனர். இந்த வீடியோ வைரலாகியது.

    இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிறுத்தை சிவா இயக்குகிறார். மேலும் அவர் ஹைதராபாத் புறப்படும் படங்களையும் அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    இந்த படத்தை அடுத்த ஆண்டு வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+