பாட்டுக்கு ராஜா காப்பிரைட் கேட்டார்.. எஸ்பிபி இறந்த போது.. ரஜினி பேசியதும் மாறிய இளையராஜா முகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கும், கமல், விஜயகாந்த், ராமராஜன், முரளி, மோகன் என எல்லோருக்கும் ஒரே நேரத்தில் இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. ஆனால், எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இசையமைப்பதாகச் சொல்வார். ஆனால் கமலுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்வார். இதை முதல்வர் முன்னும் பதிவுசெய்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கலகலப்பாகக் கூறி அரங்கில் சிரிப்பொலி எழுந்தது. மேலும், தன்னுடைய பாடல்களை அனுமதி இல்லாமல் எங்கும் பாடக்கூடாது என வழக்கு போட்டார். அது எஸ்பிபியாக இருந்தாலும் அதுதான் சட்டம் என்றார். ஆனால் மனைவி மகள் இறந்தபோது வராத கண்ணீர் நண்பன் எஸ்பிபி இறந்தபோது இளையராஜாவுக்கு வந்தது என ரஜினி கூற, கண்கலங்குவதுபோல் ஆகிவிட்டார் இளையராஜா.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'சிம்போனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் இளையராஜாவுக்குப் பாராட்டு விழா நேற்று மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சார்ந்த திரையிசை கலைஞர்களும் நடிகர்களும் கலந்துகொண்டனர்.

Rajinikanth Funny Speech About Ilaiyaraaja

இளையராஜாவுக்கு பாராட்டு விழா

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் இளையராஜாவை வாழ்த்திப் பேசினர். இளையராஜா ஏற்புரை ஆற்றினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்," சினிமாவில் மட்டுமல்ல இதுவரை நான் கண்ணால் பார்த்த அதிசயமான மனிதர் என்றால் அது இளையராஜா தான். அவரைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம். 1970 தொடங்கி, 1980, 1990 காலகட்டங்களில் அவர் இசையமைத்த பாடல்கள் இப்போது போட்டால் கூட ஹிட் அடிக்கும்.

இளையராஜா

அவரை ஒரு மாமனிதராகவே நான் பார்க்கிறேன். நான் அவரை சுவாமி என்றுதான் அழைப்பேன். ராகதேவி ராகதேவன் இளையராஜாவுக்கு இசையை அள்ளிக் கொடுக்கிறார். சொல்வதை செய்யும் ஆள் என்றால் அது இளையராஜா தான். இந்தப் படம் ஹிட் ஆகும் என்று அவர் சொன்னால் அந்தப் படம் ஹிட் ஆகும். அந்த அளவு இசை உலகில் வாழ்பவர். ஒரு சினிமா ஸ்டுடியோவை மியூசிக் ஸ்டுடியோவாக மாற்றினார். பிரசாத் லேபை விட்டு வெளியே வந்த போது சில இழப்புகளை சந்தித்தாலும் இப்போது வரை அவரது ஹார்மோனியத்தை இசைக்கிறார்.

ரஜினி பேச்சு

தன்னுடைய பாடல்களை அனுமதி இல்லாமல் எங்கும் பாடக்கூடாது என வழக்கு போட்டார். அது எஸ்பிபியாக இருந்தாலும் அதுதான் சட்டம் என்றார். ஆனால் மனைவி, மகள் இறந்த போது வராத கண்ணீர் நண்பன் எஸ்பிபி இறந்தபோது இளையராஜாவுக்கு வந்தது. இளையராஜாவுக்கு இல்லாத திமிர் யாருக்கும் இருக்காது. வியக்கத்தக்க மனிதன் என்றால் அது இளையராஜா தான். கமல் இங்கு பாடல் பாடியதும் நான் பேசியதும் ஒன்றுதான். நான், கமல், விஜயகாந்த், ராமராஜன், முரளி, மோகன் என எல்லோருக்கும் ஒரே நேரத்தில் இசையமைத்தவர் இசைஞானி.

கமலுக்கு எக்ஸ்ட்ரா

எல்லோருக்கும் ஒரேமாதிரிதான் இசையமைப்பதாக சொல்வார். ஆனால் கமலுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்வார். இதை முதல்வர் முன்னும் பதிவுசெய்கிறேன். அந்தத் தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே பாட்டெல்லாம் எப்பேர்ப்பட்ட பாடல். அதனால் தான் எங்களை விட கமல்ஹாசனுக்கு நல்ல பாட்டைப் போட்டுருக்கார். இப்பேர்ப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கை வரலாறு படமாக விரைவில் வர வேண்டும். இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படம் விரைவில் ரிலீசாக வேண்டும். வேண்டுமானால் அதற்கு நான் கூட திரைக்கதை எழுத தயாராக இருக்கேன்" என பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+