திமுக, அதிமுகவுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைக்கமாட்டார்- 'சூப்பர்வைசர்' தமிழருவி மணியன் திட்டவட்டம்
சென்னை: திமுக, அதிமுகவுடன் ஒருபோதும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணி அமைக்க மாட்டார் என்று அவர் தொடங்க இருக்கும் கட்சியின் மேற்பார்வையாளரான தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
2107-ம் ஆண்டு இறுதியில் தாம் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் இது தொடர்பான எந்த முயற்சியும் ரஜினி தரப்பில் மேற்கொள்ளப்படாமல் இருந்தது கடும் விமர்சனத்தை உருவாக்கியது.

மேற்பார்வையாளர் தமிழருவி மணியன்
இந்த நிலையில் அடுத்த மாதம் புதிய கட்சி தொடங்க உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். மேலும் தாம் தொடங்க இருக்கும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியும் மேற்பார்வையாளராக - சூப்பர்வைசராக தமிழருவி மணியனும் இருப்பார்கள் என்றும் ரஜினிகாந்த் அறிவித்தார்.

அதிமுகவுடன் கூட்டணியா?
இதையடுத்து புதிய கட்சிக்கான நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே ரஜினிகாந்த், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக மூத்த தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

திராவிட கட்சிகளும் கூட்டணியும்
ஆனால் இன்று நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ள தமிழருவி மணியன், அதிமுக- திமுக ஆகிய 2 கட்சிகளுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைக்க மாட்டார் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தாம் ரஜினிகாந்திடம் இரு திராவிட கட்சிகளுடனும் உடன்பாடு எதுவும் வைத்து கொள்ள கூடாது என விருப்பத்தை தெரிவித்தேன்.

ரஜினிகாந்த் திட்டவட்டம்
இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், இரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி என்கிற தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன். நீங்கள் என்னை நம்பலாம். என்னைப் பொறுத்தவரையில் எவ்வளவு கடுமையாக விமர்சித்தாலும் எதிர்வினையாற்றபோவது இல்லை என ரஜினிகாந்த் கூறியதாக பதிவு செய்துள்ளார் தமிழருவி மணியன்.

ரஜினிதான் கடைசி நம்பிக்கை
மேலும், ரஜினிகாந்த் அன்பும் அடக்கமும் தன் உயர் பண்புகளாக கொண்டவர். அவரால் தமிழகத்தில் நல்ல அரசியல் மாற்றம் நடந்தேறும் என்று நான் நம்புகிறேன். அவர்தான் எனது அரசியல் வாழ்வின் கடைசி நம்பிக்கை என்றும் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications