அதுதான் ரஜினி செய்யப்போகும் சிறப்பான தரமான சம்பவம்.. இதுஇல்ல.. 'வெயிட் அண்ட் சி'
Recommended Video
சென்னை: தலைவர் அரசியலுக்கு எப்போது நுழைவார் என்பதை அறிய ஆவலுடன் அவரது ரசிகர்கள் காத்திருக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோ, சன் பிக்சர்ஸ் உடன் கைகோர்த்து புதிய படத்தில் நடித்து அதன் மூலம் சிறப்பான தரமான சம்பவங்களை செய்ய முடிவு செய்திருக்கிறார்.
பாட்ஷாவில் தொடங்கி பேட்டை வரை ஒவ்வொரு படத்திலும் சிறப்பான தரமான சம்பவங்களை ரஜினிகாந்த் நடிகராக செய்து வருகிறார். ஆனால் கையோடு அரசியல் தொடர்பான விடுகதைகளை சொல்லிவிடுகிறார்.
இதனால் ரஜினி ஒவ்வொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும் போதும் ரஜினி அரசியலை அறிவிப்பார் அறிவிப்பார் என்று எண்ணி காத்திருந்த ரசிகர்கள் கடைசியில் காலா படத்திற்கு முன்பு தான் ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை அறிந்து கொண்டனர்.

ரஜினி நடிக்கிறார்
ஆனால் ரஜினி அதற்கு பிறகு பேட்டை, தர்பார் என இரண்டு படங்களில் நடித்து விட்டார். அப்போது சன்பிக்சர்ஸ் உடன் இணைந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.

70வயதாகும் ரஜினி
இந்த படம் அடுத்த பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனது மூலம் 70வயதாகும் ரஜினி அரசியலுக்கு வருவது இன்னும் தாமதமாகி உள்ளது.

நேரடியாக தேர்தல்
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. அவர் ரஜினி மக்கள் மன்றத்தை ஆரம்பித்தார். அதன்பிறகு கட்சி ஆரம்பிக்கும் வேலைகளில் இறங்கவில்லை. நேரடியாக 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களம் இறங்க முடிவு செய்திருக்கிறார்.

ரஜினிதான் சொல்லணும்
ஆனால் தமிழகத்தில் தேர்தல் வருவதற்கு இன்னும் 18 மாதங்களுக்கு மேல் உள்ளதால் .ரஜினி அதற்கு முன்னால் முழுநேர அரசியல்வாதியாவது எப்போது என்ற எதிர்பார்ப்பு ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியிலும் எழுந்துள்ளது. அதற்கான விடையை ரஜியை தவிர வேறு யாரும் விடைஅளிக்க முடியாது.

வெயிட் பண்ணுங்க
அதுவரை ரஜினி அரசியலை பற்றி மட்டுமல்ல பொதுமக்களின் அன்றாட பிரச்சனைகள் தொடர்பாக கூட அரசியல்வாதியாக கருத்து சொல்வதற்கு கூட வாய்ப்பு இல்லை. காலாவில் சொன்னதை போல் ரஜினி. "வேங்க மகன் ஒத்தையில் நிக்கேன்.. இப்ப வாங்களே" என்று அரசியல்வாதிகளை அழைக்கும் நாள் தான் ரஜினி செய்ய போகும் சிறப்பான தரமான சம்பவம் ஆகும். அதற்கு காத்திருப்போம்.
-
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை












Click it and Unblock the Notifications