சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினிக்கு மட்டும் ஏன் வரிசையா இப்படியெல்லாம் நடக்குதோ.. அப்போ கட்சி அறிவிப்பு அவ்வளவுதானா?

Google Oneindia Tamil News

சென்னை: அப்போ.. இப்போ என்று ஒருவழியாக கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த நேரத்திலா இப்படி நடக்க வேண்டும் என்று நொந்து போயுள்ளனர் ரஜினிகாந்த் ரசிகர்கள்.

டிசம்பர் 31ம் தேதி கட்சி துவங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன், ஜனவரி மாதம் கட்சி துவங்கப் போகிறேன் என்று கூறியிருந்தார் ரஜினி. பல நீண்ட வருடங்களுக்கு பிறகு அவர் உறுதியாக இப்படி ஒரு வார்த்தையை சொன்னதால்.. "ஒரு வார்த்தை கேட்க பல வருஷம் காத்திருந்தேன்.." என ஐயா பாட்டை அசால்ட்டாக மாற்றி பாடி திளைத்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.

ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை.. ஆரம்பம் முதலே அதகளமாகிப் போய் கிடக்கிறது ரஜினியின் அரசியல் களம்.

கட்சி பெயர், சின்னம்

கட்சி பெயர், சின்னம்

ஒரு கட்சியையும், சின்னத்தையும் பதிவு செய்து பெற தேர்தல் ஆணையத்தில் குறைந்தது 6 மாதமாவது ஆகும். ஆனால் ரஜினி இதுவரை அதை செய்யாமல் ஏப்ரலில் தேர்தலை சந்திக்கப்போகும் தமிழகத்தில் எப்படி களம் காண்பார் என்பது பெரிய கேள்விக்குறி. ஆனால் மக்கள் சேவை கட்சி என்ற பெயரிலான ஒரு கட்சியை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஸ்டாலின் பதிவு செய்து வைத்திருப்பதால் அதை கையகப்படுத்தி தலைவராகிவிடலாம் என்றால் அந்த பெயரை ஒட்டி ஒரு கட்சி இருப்பதால் கேஸ் போடுவேன் என்று எச்சரிக்கிறார் கட்சி தலைவர். இப்படி குடைச்சல் ஒரு பக்கம் என்றால், இன்று இன்னொரு பெரிய தலைவலி 'தலைவருக்கு' வந்துவிட்டது.

 சூட்டிங் ஸ்பாட்டில் கொரோனா பரவல்

சூட்டிங் ஸ்பாட்டில் கொரோனா பரவல்

ஆம்.. அண்ணாத்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் கொரோனா பயங்கரமாக பரவி பதற்றத்தை ஏற்படுத்திவிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார் ரஜினி. அரசியலுக்கு வரும்முன்பு வெளியாகப்போகும் கடைசி படம் இதுதான். எனவே சூட்டிங்கை முடித்துவிட்டுத்தான் அரசியலுக்கு அவர் வர முடியும். அப்படித்தான் அவரும் சொன்னார்.

அண்ணாத்த சூட்டிங் ரத்து

அண்ணாத்த சூட்டிங் ரத்து

ஹைதராபாத்தில் நடந்த சூட்டிங்கை பாதியிலேயே நிறுத்திவிட்டது சன் பிக்சர்ஸ். படக்குழுவைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நல்லவேளையாக வயதில் மூத்தவரான ரஜினிக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், இன்னும் கூட சில நாட்கள் கழித்து ரஜினிக்கு மறுபடி சோதனை நடத்தி பார்க்க அவர் குடும்பத்தார் திட்டமிட்டுள்ளனர். எனவே அவர் சென்னையில் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வார் என்று தெரிகிறது.

 ஒரு வாரம்தான் இருக்கு

ஒரு வாரம்தான் இருக்கு

இன்னும் ஒருவாரம்தான் எஞ்சியுள்ள நிலையில், ரஜினி எப்படி கட்சி அறிவிப்பை வெளியிட முடியும். தனிமைப்படுத்திக்கொள்ளும் அவர் எப்படி வெளியே வந்து அறிவிப்பை வெளியிடுவார்.. படத்திற்கான சூட்டிங் எப்போது முடியும் என்று தெரியாமல் கட்சி நடவடிக்கை பற்றி எப்படி அவரால் திட்டமிட முடியும்.. என்று பல கேள்விகள், 'புவனா ஒரு கேள்விக்குறி'போல எழுந்து நிற்கிறது.

அரசியல் கட்சி

அரசியல் கட்சி

ரஜினிகாந்த் ஏற்கனவே பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்றவர். வயதும் முதிர்ந்த வயது. இப்படியான ஒரு சூழலில் இங்கிலாந்து கொரோனா வைரஸ், பரவல் குறித்த அச்சம் வேறு இந்தியா முழுக்க எழுந்துள்ளது. மும்பை, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களிலும், இரவு நேர ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இப்படியான நிலையில், ரஜினிகாந்த் எப்படி தேர்தல் அரசியலில் ஈடுபட முடியும்? அவரது உடல்நலம் மீது அக்கறை கொண்ட ரசிகர்கள் இதற்கு அனுமதிக்க மாட்டார்களே, என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அத்தோடு, ரஜினி கட்சியை ஆரம்பிம்பாரா மாட்டாரா என்ற மில்லியன் டாலர் கேள்வியும் இணைந்துள்ளது.

English summary
Corona spread found in Annaatthe movie shooting spot, Rajinikanth will back to Chennai, so his political party may not happen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X