அரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி?.. இன்று அறிக்கை ரிலீஸ்?.. பரபரக்கும் போயஸ்!
சென்னை: இன்று மாலைக்குள் (டிசம்பர் 1) ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முன்னதாக நேற்று மாலை ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகருடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து நேற்று பலதரப்பட்ட மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த் மாநில நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் ரஜினிகாந்த் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். மாலை 4.30 தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் 6.30 மணிக்கு முடிவடைந்தது. இந்த ஆலோசனை கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அரசியல் பிரவேசம்
நேற்று காலை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த், அரசியல் பிரவேசம் குறித்த முடிவை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்திருந்தார். இன்று மாலைக்குள் ரஜினி தரப்பில் இருந்து அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது. அந்த அறிக்கையில் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய தகவல்கள் இடம் பெறுகிறது.

இன்று மாலைக்குள் அறிக்கை
அந்த அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து மாநில நிர்வாகியான சுதாகருடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையின் என்னென்ன முடிவுகளை எடுக்கலாம்?

ஆலோசனை
அது போல் அந்த அறிக்கையில் என்னென்ன விஷயங்கள் இடம் பெறலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆலோசனையில் ரஜினி, சுதாகரை தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை. ரஜினிகாந்த் மற்ற யாரையாவது சந்திப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும்.

தெளிவான முடிவு
ரஜினி ஏற்கெனவே பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டார். அது போல் மாவட்ட நிர்வாகிகளையும் நேற்று காலை சந்தித்துவிட்டார். இதனால் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அது குறித்து இன்று தகவல்கள் வெளியாகும் என்றும் தெரிகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications