தென் மாவட்ட மக்கள் அன்பானவர்கள்.. லியோ மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்
சென்னை: தென் மாவட்ட மக்கள் மிகவும் அன்பான மக்கள், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். விஜய் நடித்துள்ள லியோ மிக பெரிய வெற்றி அடையனும் என்று ஆண்டவனை வேண்டி கொள்கிறேன் என்றும் நடிகர் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்குச் செல்லும் முன் மீடியாக்களிடம் 'இது ஒரு பிரமாண்ட படமாக இருக்கும்' என்று கூறியிருந்தார் ரஜினிகாந்த். திரைப்படத்தின் படப்பிடிப்பு, தமிழக தென் மாவட்டங்களிலும் கேரளாவிலும் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் திருநெல்வேலியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி மாறுபட்ட தோற்றத்தில் வித்தியாசமாக இருந்தார். அவரது புதிய தோற்றம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் காட்சிகள் தற்போது கன்னியாகுமரியில் நடந்து வருகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து சென்னை செல்வதற்காக இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார். அப்போது அங்கு செய்தித்தாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், புவனா ஒரு கேள்விகுறி என்ற திரைப்படத்திற்கு பின் 40 ஆண்டு காலம் கழித்து தற்போது சூட்டிங்காக நான் தென் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளேன். தென் மாவட்ட மக்கள் மிகவும் அன்பான மக்கள், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுடன் புகைப்படம் எடுக்காதது தான் வருத்தம் அளிக்கிறது என்றார்.
அப்போது செய்தியாளர்கள் சிலர், வரும் 19ஆம் தேதி விஜய் நடித்துள்ள லியோ படம் ரிலீஸ் ஆக உள்ளது அது பற்றி உங்கள் கருத்து என்ன கேட்டனர். லியோ மிக பெரிய வெற்றி அடையனும் என்று ஆண்டவனை வேண்டி கொள்கிறேன் என்று கூறினார். லியோ படம் மிகப்பெரிய பெற்றி அடைய வாழ்த்துவதாகவும் கூறினார்.
வாரிசு இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் சரத்குமார் மேடையில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பேசினார். இதனைத் தொடர்ந்து
ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது விஜய் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. ஜெயிலர் அறிவிப்புக்கு பிறகுதான் விஜய்யின் பீஸ்ட் வெளியானது. நிறைய பேர் என்னிடம் நெல்சனுக்குதான் படம் கொடுக்க வேண்டுமா என யோசிக்க சொன்னார்கள். ஆனால், எப்போதுமே ஓர் இயக்குநர் தோற்பதில்லை. அவர் எடுக்கும் சப்ஜெக்ட்டுகள்தான் தோற்கிறது என்று கூறினார்.
ரஜினி சொன்ன காக்கா பருந்து கதை சர்ச்சையானது. அவர் சொன்ன கதையை வைத்து ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் விஜயை ட்ரோல் செய்ய, இதை பார்த்து கொந்தளித்து போன விஜய் ரசிகர்கள் ரஜினியை தாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில் விஜய் நடித்த லியோ படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துவதாக கூறியுள்ளார் ரஜினிகாந்த்.












Click it and Unblock the Notifications