Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜீவ்காந்தி படுகொலை.. விடுதலை கோரிய நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் தள்ளுபடி - வழக்கு கடந்து வந்த பாதை

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

ஆளுநரின் உத்தரவுக்கு காத்திருக்காமல் தமிழ்நாடு அரசு தங்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி, ரவிச்சந்திரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. விடுதலை செய்யக்கோரியை மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Rajiv Gandhi assassination: Timeline of events for Nalini and Ravichandran

கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று 31 வருடங்களுக்கு மேலாக நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையிலிருந்த பேரறிவாளன் கடந்த மாதம் 18ந்தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

ஏழுபேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் கால தாமதம் ஆக்கியதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், தனக்கே உரிய பிரத்யேக அதிகாரமான சட்டப் பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், விடுதலை கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 வருடங்களுக்கும் மேலாக நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் இருந்து வந்தனர். இந்த வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் கடந்த மாதம் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் கால தாமதம் செய்ததை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், தனக்கே உரிய பிரத்யேக அதிகாரமான சட்டப் பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த தீர்மானத்தின் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதையடுத்து,ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நளினி வழக்கு தொடர்ந்தார். அதேபோல, ரவிச்சந்திரனும் விடுதலை செய்ய கோரி வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகளை எல்லாம் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் விசாரித்தனர்.

இந்நிலையில், ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல், அமைச்சரவை தீர்மானத்தின்படி தங்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நளினி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடைபெற்றபோது, அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால் மீண்டும் ஆளுநர் முடிவுக்கு விடக்கூடாது என நளினி தரப்பில் வாதிடப்பட்டது. அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் அதை சட்டவிரோதம் என உயர்நீதிமன்றம் அறிவிக்கலாம் என்றும் நளினி தரப்பில் வாதிடப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுதலை செய்வதற்கு ஆளுநரின் கையெழுத்து அவசியம் என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழ்நாடு அரசு, அதேநேரம், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை குறித்து உயர்நீதிமன்றமே கூட பரிசீலிக்கலாம் என வாதிட்டது. இதையடுத்து விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

31 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தரப்பில் தாக்கல் செய்த வழக்கில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

தனது தாயார் பத்மாவதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை அடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக 4 முறை நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே விடுதலை செய்யக்கோரிய நளினி, ரவிச்சந்திரன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். உச்சநீதிமன்றத்தை நாடவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+