கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம்
சென்னை: தவெக சார்பில் ஊடகங்களுக்கு செய்தி அனுப்ப கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் க்ரூப்பில் மதியம் 1:05 மணியளவில், கட்சி சார்ந்த நபர்தான் தவெக அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தை பதிவிட்டதாகவும், தவறாக எழுதப்பட்டிருந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகவே, அந்தக் கடிதம் க்ரூப்பிலிருந்து டெலீட் செய்யப்பட்டதாகவும் தகவல் ஊடகங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், தவெகவினர் ஊடகங்கள் பொய்ச் செய்தி பரப்புவதாக விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் எக்ஸல பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " பொய் செய்திகளைப் புறக்கணிப்போம்! நமது கழகத்தின் அசுர வளர்ச்சியைக் கண்டும், மக்களிடையே நமக்குக் கிடைத்து வரும் பேராதரவைக் கண்டும் அச்சமடைந்துள்ள அறிவாலய வட்டாரம், திட்டமிட்டே கழகத்தின் மீது சேறு பூசும் வேலைகளில் இறங்கியுள்ளது.

குறிப்பாக, அடுத்தடுத்து அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளை (Fake News) சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரப்பி வருகின்றனர்.
சில ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் உண்மையை ஆராயாமல், ஒருதரப்பு தரும் தவறான தகவல்களை அப்படியே செய்திகளாக வெளியிட்டு வருவது தவறு. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், இது போன்ற உள்நோக்கம் கொண்ட பொய்ப் பிரச்சாரங்களுக்குத் துணை போக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
வெற்றிக் கழக கண்மணிகளே.. வெற்றிக் கழகத்தின் உண்மையான போர்வீரர்களான நீங்கள், இது போன்ற மலிவான அரசியலால் உங்கள் கவனம் சிதற இடமளிக்காதீர்கள். இத்தகைய சலசலப்புகள் நமது பயணத்தின் வேகத்தைக் குறைக்க எடுக்கப்படும் முயற்சிகள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
மக்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தோழர்களே, தொடர்ந்து மக்களுக்கான பணிகளில் கவனம் செலுத்துங்கள். எவை உண்மை, எவை ஜோடிக்கப்பட்ட பொய்கள் என்பதைப் பிரித்தறியும் தெளிவு தமிழக மக்களுக்கு நன்கு உண்டு.
அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ளத் திராணியற்றவர்கள் நடத்தும் இந்த "Fake News Factory" (பொய் செய்தித் தொழிற்சாலை) மீது விரைவில் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டத்தின் வாயிலாக இத்தகைய அவதூறுகள் முடக்கப்படுவது உறுதி.
பொய் செய்திகளைப் புறக்கணிப்போம்! நீதி வெல்லும்! வெற்றி நிச்சயம்! "இவ்வாறு ராஜ்மோகன் கூறியுள்ளார்.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை! என்ன நடக்கும்? -
சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை! -
எந்த முதல்வரும் செய்யாத மூவ்.. உள்ளாட்சித் துறையை முதல்வர் விஜய் தன்வசம் வைத்திருப்பது ஏன்? பின்னணி -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications