"ஸ்டாலின் இங்க பாருங்க" ராஜ்நாத் சிங் சொன்ன வார்த்தை! உடனே வெடித்து சிரித்த முதல்வர்! மேடையில் கலகல
சென்னை: கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அமர்ந்து கொண்டு இருந்த முதல்வர் ஸ்டாலின்- அமைச்சர் ராஜ்நாத் சிங் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நூறு ரூபாய் நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட முதல்வர் ஸ்டாலின் அதைப் பெற்றுக் கொண்டார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல் முருகன், தமிழ்நாடு அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ராஜ்நாத் சிங்: இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான துரைமுருகன் பொன்னாடை போர்த்தினார்.
வெடித்துச் சிரித்த முதல்வர் ஸ்டாலின்: தொடர்ந்து நிகழ்ச்சி நடந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அருகருகே அமர்ந்து இருந்தார். அப்போது திடீரென முதல்வர் ஸ்டாலினை அழைத்த ராஜ்நாத் சிங், தனக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடை குறித்து ஏதோ கூறுகிறார். இதைக் கேட்டதும் முதல்வர் ஸ்டாலினும், ராஜ்நாத் சிங்கும் வெடித்துச் சிரித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
முதல்வர் பேச்சு: தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "நா + நயம் மிக்க தலைவருக்கு நாணயம் வெளியிடுவது ரொம்பவே பொருத்தமானது. நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இதுவரை தலைவரை நாம் கொண்டாடி வந்தோம். இன்று இந்தியாவே கொண்டாடுகிறது என்பது தான் இந்த விழா. மாநில உரிமைக்காகக் குரல் கொடுத்த கருணாநிதி.
நாணயம் என்பதற்கு இன்னொரு பொருளும் உள்ளது. அதாவது கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது. சொன்னதைச் செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம் எனச் சொல்லிச் சொன்னதையெல்லாம் செய்த காட்டியது தான் கருணாநிதி. அதுவே நாணயத்துக்கு அடையாளம். இப்போது அவரது வழியில் திராவிட மாடல் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது" என்றார்.
ராஜ்நாத் சிங் பேச்சு: தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங் முதலில் தலைசிறந்த தலைவருக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். அனைவரும் எழுந்து நின்று சில நொடிகள் கைதட்டிய பிறகே அவர் தனது பேச்சைத் தொடர்ந்தார். அங்கே பேசிய அவர், "கருணாநிதி மிகச் சிறந்த ஒரு நிர்வாகி.. மத்தியில் வெற்றிகரமான கூட்டணி ஆட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி. எத்தனையோ மாநிலக் கட்சிகள் மறைந்து போனாலும் திமுக வலுவாக இருக்கக் கருணாநிதி போட்ட அடித்தளமே காரணம்.
கருணாநிதி ஒரு மாநிலத்தின் அரசியல்வாதி இல்லை. தேசத்தின் தலைவராகப் பார்க்கப்பட்டார். பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவைப் பேணி வந்தவர் கருணாநிதி.. மேலும், சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவரும் கருணாநிதி" என்று அவர் பேசினார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications