அழகுக்காக ஆபரேசன்..அதுவும் அந்த இடத்திலா? விடாது துரத்தும் சர்ச்சை..விளக்கம் அளித்த எஸ்கே பட நடிகை!
சென்னை: தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, இந்தியன் 2, அயலான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் அழகுக்காக உதடு மற்றும் மார்பகத்தில் அறுவை சிகிச்சை செய்ததாக பல ஆண்டுகளாகவே சர்ச்சை உலாவுகிறது. இந்த நிலையில் தான் ஏற்கனவே அழகு தான் எனவும் அழகுக்காக கூடுதலாக எந்த அறுவை சிகிச்சையும் செய்யவில்லை என மீண்டும் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார் ரகுல் பிரீத் சிங். அதே நேரத்தில் அழகாக இருக்க வேண்டும் என வேறு யாராவது நினைத்தாலும், அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என நினைத்தால் அதில் தவறு இல்லை எனவும் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் அறிமுகமாகி திறமையான அழகான நடிகை என பெயர் எடுத்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தற்போது தெலுங்கு, கன்னடம் மற்றும் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.
தமிழில் முதன்முறையாக தடையறத் தாக்க படத்தில் நடித்த அவர் அதற்கு பிறகு என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, இந்தியன் 2 கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து பாலிவுட்டிலும் கால் பதித்த அவர் தற்போது மாதவன் அஜய் தேவ்கான் இணைந்து நடிக்கும் தே தே பியார் தே 2 படத்தில் நடித்து வருகிறார்.

நேற்று தான் அவர் அறிமுகமானது போல் இருக்கிறது. ஆனால் அதற்குள் 15 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டார் ரகுல் பிரீத் சிங். இந்த நிலையில் அவரைச் சுற்றி கடந்த சில தினங்களாகவே சர்ச்சை வளையங்கள் சுற்றி வருகின்றன. அழகுக்காக அவர் உதட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மார்பகத்திலும் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறிய நிலையில் அதற்கு விளக்கமும் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் தன்னை குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்திருக்கிறார் ரகுல் பிரீத் சிங். தான் சினிமாவில் அடி எடுத்து வைத்து 15 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கும் நிலையில் இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரகுல் ப்ரீத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவரிடம் அழகுக்காக நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டீர்களாமே என ஒருவர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர்," நான் அழகாக இருக்க வேண்டும் என நான் எதையும் செய்ய மாட்டேன். எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று ஒருபோதும் நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. அழகிய முகத்தை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் தான் அழகாக இருக்க வேண்டும் என வேறு யாராவது நினைத்தாலும் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என நினைத்தால் அதில் தவறு இல்லை. அது அவரவர் விருப்பம். ஆனால் செய்யாத ஒன்றை செய்ததாக கூறி வதந்தி பரப்புவது என்ன மனநிலை என தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications