ஸ்டாலினை வைத்து அன்புமணிக்கு அட்வைஸ்.. ராமதாஸ் சொன்ன வார்த்தை.. கூட்டணி கணக்கை மாற்றும் பாமக?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: திமுக தலைவராக கருணாநிதி இருந்த போது, மு.க.ஸ்டாலின் எந்த முணுமுணுப்பையும் வெளிப்படுத்தவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டி இருக்கிறார். ஏற்கனவே வன்னியர் சங்க மாநாட்டில் ராமதாஸ் பேசும் போதும் கூட, தம்பி ஸ்டாலின் என்றே மென்மையாக பேசி இருந்தார். இதனால் ராமதாஸ் திமுக கூட்டணிக்கு செல்ல விரும்புகிறாரா என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது.

பாமக நிறுவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், பாமகவில் நிலவி வரும் பிரச்சனை அந்த கட்சிக்கு பின்னடைவை உருவாக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே பாமக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Ramadoss Praises CM Stalin s Loyalty to Karunanidhi Hints at Possible DMK Alliance

பாமக யாருடன் கூட்டணி?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், தற்போது அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கிறது. இந்த கூட்டணியில் பாமகவை இணைக்க பாஜக முயன்று வருகிறது. ஏற்கனவே ஆடிட்டர் குருமூர்த்தி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

ராமதாஸ் அறிவிப்பு

ஆனால் ராமதாஸ் இதுவரை கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்கவில்லை. கடந்த முறை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்த போதும், எந்த சந்திப்பும் நடக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் சென்னைக்கு அமித்ஷா வருவதற்கு ஒருநாள் முன்பாக தான் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டார்.

அன்புமணிக்கு அட்வைஸ்

தற்போது, கடைசி மூச்சு இருக்கும் வரை பாமகவின் தலைவர் நானே என்று ராமதாஸ் கூறி வருகிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், கருணாநிதி பாணியில் பாமகவின் தலைவராக இறுதி மூச்சு வரை நான்தான் செயல்படுவேன். ஸ்டாலின் பாணியில் அன்புமணி செயல் தலைவராக செயல்பட வேண்டும்.

தம்பி ஸ்டாலின் என்ற ராமதாஸ்

கருணாநிதி தலைவராக இருந்த போது, ஸ்டாலின் தரப்பில் இருந்து ஒரு முணுமுணுப்பு கூட வரவில்லை என்று கூறி இருக்கிறார். முதல்வர் ஸ்டாலினை ராமதாஸ் நேரடியாக பாராட்டியதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வன்னியர் சங்க மாநாட்டில் அன்புமணி திமுகவை ஆவேசமாக விமர்சித்த நிலையில், ராமதாஸ் மென்மையாக தம்பி ஸ்டாலின் என்று பேச்சை தொடங்கினார்.

பாஜக கூட்டணியை விரும்பாத ராமதாஸ்

இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. தற்போது 2வது முறையாக ஸ்டாலினை பாராட்டி பேசி இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலிலேயே பாஜக கூட்டணிக்கு சென்றதில் ராமதாஸ்-க்கு விருப்பமில்லை. இதனால் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ராமதாஸ் விரும்புவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

திமுக - பாமக கூட்டணி?

இதனால் ஸ்டாலினை பாராட்டுவதற்கு கூட்டணி கணக்கு தான் காரணமா என்ற விவாதம் நடந்து வருகிறது. ஏற்கனவே திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் மூலமாக பாமக பேசி வருவதாக தகவல் வெளியாகியது. தற்போது ராமதாஸும் திமுக மீது மென்மையான போக்கை கடைபிடித்து வருவது கூட்டணி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+