Ramadoss second wife: துணை நர்ஸ் டூ துணைவி! ராமதாஸுடன் 50வது திருமண நாள்.. யார் இந்த சுசீலா? தைலாபுரம் வந்தது எப்படி?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்படுவது பாமக நிறுவனர் ராமதாஸின் இரண்டாவது மனைவி சுசீலா குறித்த விவகாரம் தான். சமீபகாலமாக பாமகவில் மூன்றாம் நபரின் தலையீடு இருக்கிறது என பேசப்பட்ட நிலையில் திடீரென இரண்டாவது மனைவி சுசீலாவுடன் ஐம்பதாவது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார் ராமதாஸ் என்கின்றனர் பாமகவினர். இந்த நிலையில் சுசீலா யார்? எப்படி ராமதாஸ் குடும்பத்திற்குள் வந்தார்? அவரது பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
அடிப்படையில் மருத்துவரான பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், வன்னியர் சங்கத்தை ஆரம்பித்து, அதற்குப் பிறகு அதனை கட்சியாக மாற்றினார். கிட்டத்தட்ட 60 ஆண்டு காலம் பொது வாழ்வில் இருக்கும் ராமதாஸ் அரசியல் ரீதியாக சர்ச்சைகளை சந்தித்தாலும் குடும்ப அளவில் அல்லது தனிப்பட்ட முறையில் எந்த சர்ச்சையிலும் சிக்கியது இல்லை.
இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறார் ராமதாஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி சரஸ்வதியுடன் திருமண நாளை கொண்டாடிய நிலையில், தற்போது திடீரென இரண்டாவது மனைவி சுசீலாவுடன் ஐம்பதாவது திருமண நாளை கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ராமதாஸ்
சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக சொல்லப்படும் நிலையில் ராமதாஸின் குடும்பத்திலிருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை. மேலும் ராமதாஸின் தீவிர ஆதரவாளர்கள் பலரும் அதில் பங்கேற்கவில்லை. இதற்கிடையே சமூக வலைதளங்களில் ராமதாஸின் இந்த விவகாரம் பேசுபொருளாக இருக்கிறது. 66 வயதான சுசீலாவுடன் ஐம்பதாவது திருமண நாளை கொண்டாடி இருக்கும் நிலையில் 16 வயதிலேயே சுசீலாவை அவர் திருமணம் செய்து கொண்டார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது என்கின்றனர் பாமகவினர். இது ஒரு புறம் இருக்க சுசீலா யார்? அவரது பின்னணி என்ன? என்பது குறித்து கேள்வி எழுந்திருக்கிறது.
சுசீலா யார்?
ஏற்கனவே சொன்னது போல அடிப்படையில் மருத்துவரான ராமதாஸ் பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன்னர் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். ஏழை எளிய மக்களுக்காக மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை செய்திருக்கிறார். தொடர்ந்து திண்டிவனம் அருகே ஒரு கிளினிக்கை ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதில் பணிக்குச் சேர்ந்தவர் தான் சுசிலா. மிக இளம் வயதிலேயே பணிக்குச் சேர்ந்திருக்கிறார். டோக்கன் ஆயா என அவரை அழைப்பார்கள் என்கின்றனர் பாமகவினர்.
ராமதாஸ் சுசிலா போட்டோ
தொடர்ந்து ராமதாஸுடன் மருத்துவமனையில் பணியாற்றி வந்த அவர் அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்வாராம். இதனால் ராமதாஸுக்கு சுசிலா மீது தனிப் பிரியம் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து ராமதாஸை வீடு வரை விட்டுவிட்டுத்தான் சுசிலா தனது வீட்டுக்கே செல்வாராம். இப்படியாக மருத்துவமனையில் ஏற்பட்ட பழக்கம் இருவருக்கிடையே தீவிரமாகத் தொடங்கி இருக்கிறது. ஒரு கட்டத்தில் ராமதாஸின் அரசியல் பயணத்திலும் சுசிலா இணைந்துகொண்டார் என்கின்றனர் பாமகவினர்.
ராமதாஸ் சுசிலா திருமணம்
ஆனால் இது அவரது வீட்டுக்குத் தெரியாது எனச் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் தன்னுடன் தொடர்ந்து பயணிக்கும் சுசிலாவை திருமணம் செய்துகொள்ளலாம் என ராமதாஸ் நினைத்ததாகவும் அதனால் வீட்டில் பெரிய பிரச்சனை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ராமதாசுடன் நெருங்கிய பயணத்தால் அரசியலிலும் சுசிலாவின் ஆதிக்கம் இருந்திருக்கிறது. இந்த நிலையில் தொடர் அரசியல் போராட்டத்தைச் சந்தித்து ராமதாஸ் வீட்டிலும் பிரச்சினையைச் சந்திக்கத் தொடங்கினார் என்கின்றனர் பாமகவினர்.
பாமக
மகன் அன்புமணிக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அதில் சுசிலாவின் தலையீடு அதிகமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் சொத்து விவகாரத்திலும் ராமதாஸ் வீட்டில் பிரச்சனை வெடிக்க தன்னை பற்றி பொதுவெளியில் தெரிய வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த திருமண நிகழ்வை சுசிலா நடத்தியதாகவும், அவரது ஆதரவாளர்கள் தான் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகச் சொல்கின்றனர் பாமகவினர்.












Click it and Unblock the Notifications