"பாமக தலைவர் என்ற பெயரோடு அடையாளத்தோடு யார் என்ன சொன்னாலும் கேட்காதீங்க”.. அன்புமணியை சாடிய ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: "தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுப்படாமல் யார் எந்த யாத்திரை போனாலும் பயனில்லை. பாமக தலைவர் என்ற பெயரோடு அடையாளத்தோடு யார் என்ன சொன்னாலும் அதை கேட்காதீர்கள்" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். (Ramadoss Slams Anbumani)

பாமக நிறு​வனர் ராம​தாஸ், அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி ராம​தாஸ் இடையே​யான மோதல் தொடர்ந்து வரும் நிலை​யில் இருவரும், மாறி மாறி நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்து வந்தனர். இருவரும் தனித்தனியாக பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Ramadoss Slams Anbumani Rallies Without Leadership Are Useless

அன்புமணி ராமதாஸ் பயணம்

இந்நிலையில், ராம​தாஸின் பிறந்த நாளான ஜூலை 25 ஆம் தேதி தமிழக மக்கள் உரிமை மீட்​புப் பயணத்​தைத் தொடங்​கினார் அன்புமணி ராமதாஸ். 100 நாட்கள் இந்த சுற்றுப்பயணம் நடைபெறும் என்றும் அன்​புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். முன்னதாக இந்த நடைபயணத்​தால் வடதமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர்​கெடும் என்​ப​தால் தடை விதிக்​கக்​கோரி டிஜிபி அலு​வல​கத்​தில் பாமக நிறுவனர் ராம​தாஸ் மனு அளித்​தார்.

எனினும் திட்​ட​மிட்​டபடி நடைபயணத்​துக்​கான 'உரிமை மீட்​க... தலை​முறை காக்க' என்ற இலச்​சினையை​யும், 'உரிமைப் பயணம் ' என்ற தலைப்​பில் பிரச்​சார பாடலை​யும் அன்​புமணி வெளி​யிட்​டார். அதைத்தொடர்ந்து, 25 ஆம் தேதி திருப்​போரூரில் நடைபயணத்தை தொடங்​கி​னார்.

ராமதாஸ் பேட்டி

இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ், அப்போது பேசிய அவர், "பாட்டாளி மக்கள் கட்சிக்கான வேரும், வியர்வையும் தைலாபுரத்தில் மட்டும் தான் உள்ளது. ஒரே தலைமை தான் ஒரே தலைவர் தான். ஆன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தேவையில்லாதது. தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுபடாமல் யார் எந்த யாத்திரை போனாலும் ஒரு துளியும் பயன் இல்லை.

யார் சொன்னாலும் கேட்காதீங்க

தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள். காவல்துறை தலைமைக்கும், உள்துறை தலைமைக்கும் எல்லாம் தெரியும். முறைப்படி புகார் அளித்திருக்கிறோம். பா.ம.க தலைவர் என்ற பெயரோடு அடையாளத்தோடு யார் என்ன சொன்னாலும் அதை கேட்காதீர்கள்." எனத் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

மேலும் பேசிய ராமதாஸ், "எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழர்கள் தொடர்ந்து கைது செய்வது தொடர்கதையாகி இருந்து வருகிறது. இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் வலை மீன்களை கொள்ளை அடித்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 40-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யபட்டு விசைபடகுகள் பறிமுதல் செய்யபட்டுள்ளன. மத்திய அரசு மீனவர்களை மீட்டு மீனவ சமூதாயத்திற்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்.

நிறைவேற்ற ராமதாஸ் கோரிக்கை

வேளான்மை துறை, தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்களை தனித்தனியாக சந்தித்து வேளாண் வளர்ச்சி குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வது முறையல்ல. உழவர் 2.0 என்ற திட்டத்தினை கொண்டுவந்ததோடு சரி, திட்டம் செயல்படுத்தவில்லை. விவசாயிகளுக்கும். வேளாண்மை உதவி அலுவலர்களுக்கு நேரடி தொடர்பு இருந்தால் மட்டுமே சிறப்பாக அமையும். தலைநகர் சென்னையில் எத்தனை நூலகங்கள் இருந்தாலும் கன்னிமாரா தேசிய நூலகம் தனிபெருமை கொண்டது.

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகவதால் உரிய தீர்வை அளிக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 தேர்தல் அறிக்கையில் 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கபடும் என தெரிவித்ததை நிறைவேற்றி தர வேண்டும்." எனப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+