Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்த்தாய் வாழ்த்து பஞ்சாயத்து.. உதயநிதிக்கு ஓடோடி வந்த ராமதாஸ்! அரசியலாக்க வேண்டாமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பிழைகளுடன் பாடப்பட்ட சம்பவம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. ஆளுநர் தப்பா பாடினா மட்டும் குறை சொல்றீங்களே.. என பாஜகவினர் உதயநிதி மீது விமர்சனங்களை அடுக்கினர். இந்நிலையில், இந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

என்ன பஞ்சாயத்து?: சமீபத்தில் சென்னையில் உள்ள தூர்தர்ஷன் அலுவலகத்தில் இந்தி மாத நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியானபோதே, அதை திமுக, திக, சிபிஎம், விசிக, காங்கிரஸ், பாமக என ஏறத்தாழ அனைத்த அரசியல் கட்சிகளும் வேறுபாடின்றி கண்டித்திருந்தன. திக மாணவர் அமைப்பினர் போராட்டம் கூட நடத்தியிருந்தனர். இந்த எதிர்ப்புகளுக்கு வலு சேர்க்கும் விதமாக, நிகழ்ச்சியில் சம்பவம் ஒன்று நடந்தது.

tamil thai vazhthu udhayanidhi stalin ramadoss

அதாவது, நிகழ்ச்சியின் தொடக்கத்தின்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இந்த பாடலில் 'திராவிடர் நல் திருநாடும்' என்றும் வரி வரும். ஆனால் இந்த வரியை தவிர்த்துவிட்டு பாடல் பாடப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் இந்த செயலுக்கு எதிராக கடுமையாக கொந்தளித்தது.

இப்படி இருக்கையில், முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பிழைகளுடன் பாடப்பட்டது. நாங்க பாடினா மட்டும் தப்பு சொல்றீங்களே.. இதுக்கு என்ன சொல்லப்போறீங்க? என பாஜகவினர் திமுகவை சோஷியல் மீடியாக்களில் ட்ரோல் செய்ய தொடங்கியுள்ளனர்.

இதற்கு எதிராக திமுகவினர் விளக்கம் அளிக்க, அதை ஏற்காத பாஜகவினர் மேலும் மேலும் பஞ்சாயத்தை இழுக்க.. சோஷியல் மீடியா ரத்த பூமியாக மாறியிருக்கிறது.

இச்சூழலில்தான் பாமக நிறுவனர் ரமதாஸ் உதயநிதிக்கு சப்போர்ட் செய்யும் விதமாக அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பிழைகளுடன் பாடப்பட்டுள்ளது. அது சுட்டிக்காட்டப்பட்டு இரண்டாவது முறையாக பாடப்பட்ட போதும் பிழைகளுடனே பாடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசு நிகழ்ச்சியில் பிழைகளுடன் பாடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில் நிகழ்ந்த விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பிழையுடன் தான் பாடப்பட்டது. அதில் 'தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற பகுதி விடுபட்டிருந்தது. அதுவும் வேதனையளிக்கக் கூடியது தான். இரு நிகழ்வுகளுமே மனிதப் பிழைகள்தான்; இரு நிகழ்வுகளிலுமே உள்நோக்கம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்பதை தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் அறிவார்கள்.

ஆனால், சென்னைத் தொலைக்காட்சியில் நிகழ்ந்த தவறுக்கு உள்நோக்கம் கற்பித்து ஒரு தரப்பினர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினர். அதன் எதிரொலியாக இன்றைய நிகழ்ச்சியில் நடந்த தவறை இன்னொரு தரப்பினர் சர்ச்சையாக்குகின்றனர். இரண்டுமே தவறான அணுகுமுறை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இனிவரும் காலங்களிலாவது தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையின்றி பாடுவதை உறுதி செய்வதில் தான் அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, அரசியலாக்குவதால் எந்த பயனும் இல்லை.

எனவே, சென்னைத் தொலைக்காட்சி நடத்திய விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்காக அந்த நிறுவனம் மன்னிப்புக் கேட்டதைப் போன்று, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்காக அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த துறை மன்னிப்பு கேட்க வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய தவறு நிகழ்வதைத் தடுக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய, மாநில அரசுகளிலும் உள்ள பணியாளர்களில் சிலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை பிழையின்றி பாடுவதற்கு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் பயிற்சியளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+