அதிர்ச்சியில் ஆழ்த்திய தமிழக பிரபலங்களின் மணக்கோல படங்கள்.. ‘டாக் ஆஃப் தமிழ்நாடு’ இதுதான்!
சென்னை: தமிழ்நாட்டின் முக்கிய பிரபலங்களின் திருமணம், நிச்சயதார்த்தம் ஆகியவை ஒரே நேரத்தில் தற்போது பேசுபொருளாகி உள்ளன. விஷாலுக்கு எப்போது திருமணம் என்பது பல ஆண்டுகளாக ரசிகர்கள் மனதில் இருந்த கேள்வி. அதற்கு அவரது 48 வயதில் தற்போது விடை கிடைத்துள்ளது.
அதேபோல, பலரையும் அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்திய விஷயம் பாமக நிறுவனர் ராமதாஸின் 50 ஆம் ஆண்டு திருமண விழா நிகழ்வு புகைப்படம். ராமதாஸுக்கு இரண்டாவது மனைவி இருக்கிறார் என்பதும், அவருடன் ராமதாஸ் 50 ஆம் ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடியதும் பலருக்கும் ஷாக்.

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் திருமண புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி இருந்த நிலையில், தற்போது புது பூகம்பம் கிளம்பியுள்ளது. இரண்டாம் திருமணம் செய்துகொண்ட ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, ரங்கராஜ் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த 3 திருமணங்களும் தற்போது 'டாக் ஆஃப் தமிழ்நாடு' ஆக உள்ளது.
விஷால் திருமணம்
நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம் என்பது பல ஆண்டுகளாக அவர் எதிர்கொண்டு வரும் முக்கியமான கேள்வி. இந்நிலையில் தான், தமது 48 வயதில் திருமணத்துக்கு தயாராகி இருக்கிறார் விஷால். நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 29) இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் விஷால் - சாய் தன்ஷிகா தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். "கூடிய விரைவில் திருமணம் நடக்கும். நடிகர் சங்கக் கட்டடத்தின் திறப்பு விழா இன்னும் இரண்டு மாதங்களில் கோலாகலமாக நடைபெறும். நடிகர் சங்க கட்டடத்தில்தான் எனது திருமணம் நடக்கும்." எனத் தெரிவித்துள்ளார் விஷால்.
ராமதாஸ் - சுசீலா 50 ஆம் ஆண்டு திருமண விழா
செவிலியர் சுசீலாவுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் நட்சத்திர ஹோட்டலில் 50வது திருமண நாளை கொண்டாடி உள்ளார். இந்த நிகழ்வில் ராமதாஸின் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. ராமதாஸுக்கு 2வது திருமணம் ஆன தகவலே வெளி உலகில் பலரும் அறியாத பரம ரகசியமாக இருந்து வந்த நிலையில், தற்போது 50வது திருமண விழா புகைப்படங்கள் மூலமாக இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாமகவில் தற்போது நடக்கும் பிரச்சனைகளுக்கு, அதாவது, ராமதாஸ் - அன்புமணி இடையே நடந்து வரும் மோதலுக்கு ராமதாஸின் 2வது மனைவி சுசிலா தான் காரணம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். இந்நிலையில் தான் 50 ஆண்டு காலமாக நெருங்கிய வட்டத்துக்குள் மட்டும் ரகசியமாக இருந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
கடந்த மாதம் தான் ராமதாஸ் தனது மனைவி சரஸ்வதியுடன் 60வது திருமண நாளைக் கொண்டாடினார். இந்த நிலையில் தற்போது ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் திருமண நாளைக் கொண்டாடியதாக வெளியாகி உள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி உள்ளன.
மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கேசினோ, மிஸ் மேகி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி பெயர் ஸ்ருதி. சில மாதங்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை விட்டுப் பிரிய போவதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆன புகைப்படத்தை ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். திருமண புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா 6 மாத கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார்.
ஜாய் கிரிஸில்டா ஷாக் புகார்
மாதம்பட்டி ரங்கராஜ், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் எப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற விவாதம் இணையத்தில் எழுந்தது. சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து ஜாய் கிரிஸில்டாவுடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையு நீக்கினார்.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். "எனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் இப்போது என்னோடு தொடர்பில் இல்லை. அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் மனைவியை பிரிந்து வாழ்வதாக சொன்னார். அதனை நம்பிதான் திருமணம் செய்துகொண்டேன். நான் இப்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். அவர்தான் என் குழந்தையின் அப்பா." எனத் தெரிவித்தார். இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications