குடும்ப அட்டைதார்களுக்கு வந்த அறிவிப்பு..உங்ககிட்ட ரேஷன் கார்டு + ஆதார் கார்டு இருக்கா.. இன்றே கடைசி
சென்னை: ரேஷன் கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்காவிட்டால், ரேஷன் பொருட்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும்.. இன்று ஒருநாள் மட்டுமே உள்ளதால், உடனே இணைத்து விடுங்கள்..
ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளை பெறும் முறைகளையும் எளிமையாக்கியுள்ளது மத்தியஅரசு. அந்த அளவுக்கு ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது.
ஆதார் கார்டு பயன்கள்: இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல.. மக்கள் நலத் திட்டங்களில் உதவிகளைப் பெறுவதற்கும் ஆதார் அவசியம். சிம் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆதாரை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில், ரேஷன் கார்டிலும் ஆதாரை இணைத்தாக வேண்டும்.
ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும். இதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரே நாடு ஒரே ரேஷன்: ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் வாங்கிக் கொள்ளலாம்... அதுவும் இல்லாமல், 1000 ரூபாய் உரிமைத்தொகையை வழங்க திமுக அரசு தயாராகி வருகிறது.. மகளிர் உரிமைத்தொகை மட்டுமல்லாமல் பொங்கல் பரிசுத்தொகுப்பு போன்ற உதவிகளும் இந்த ரேஷன் கார்டுகள் மூலம்தான் கிடைக்கின்றன.
இணைப்பு கட்டாயம்: அதனால்தான், ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க பல மாதங்களாகவே கால அவகாசம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் பலரும் இணைக்காமலேயே உள்ளனர்.
ஆதார் அட்டை: அப்படி இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இப்போது, ரேஷன் கார்டுடன் ஆதார் அணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம், அதாவது, ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கூடுதல் அவகாசத்திலும் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இணைக்காதவர்களுக்கு ஜூலை 1 முதல் அரிசி, கோதுமை போன்ற எந்த ஒரு பொருளும் கிடைக்காது என்று எச்சரித்துள்ளது.. ரேஷன் கார்டை ஆதாருடன் விரைந்து இணைத்துவிட்டால், உங்களுடைய ரேஷன் கார்டு ரத்தாவதை தடுத்துவிடலாம்.
ஆதார் அட்டையை ஆன்லைனில் எப்படி இணைப்பது
1. இதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. இப்போது நீங்கள் 'Start Now' என்பதைக் கிளிக் செய்க.
3. இப்போது இங்கே உங்கள் முகவரியை மாவட்ட மாநிலத்துடன் நிரப்ப வேண்டும்.
4. இதற்குப் பிறகு 'Ration Card Benefit' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
5. இப்போது இங்கே உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்பவும்.
6. அதை பூர்த்தி செய்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
7. இங்கே OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள்.
8. இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு, உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications