Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாமாயில் வாங்கிட்டீங்களா? ரேஷனில் இனி இந்த பொருளும் கிடையாதா.. தேங்காய் எண்ணெய் வருதா? அரசு முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகள் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதுடன், முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்துவிட்டு, தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், தேங்காய் விவசாயிகள் கோரிக்கை வைத்தபடியே உள்ளனர்.

Ration Card Holders and Palladam Farmers request Tamil nadu Government to provide Coconut Oil in the Ration Shops

கொள்முதல் : கேரளா, கர்நாடகா, தமிழக தென்னை விவசாயிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்த கொப்பரையை வெளி மார்க்கெட்டில் விற்க கூடாது என்றும், தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் உடனடியாக விற்பனை செய்ய என்றும், உழவர் உழைப்பாளர் கட்சி, தென்னை விவசாயம் மேம்பாட்டுக்குழு, விவசாயிகள் சங்கம் போன்ற பல்வேறு விவசாய அமைப்புகள் இதே கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.

ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. மேலும், திமுக அரசு ஆட்சிக்கு வந்தால், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதையும் நிறைவேற்றவில்லை. எனவே, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்..

பாமாயில்: உடலுக்கு பெரிதும் தீங்கு விளைவிக்க கூடிய பாமாயில் எண்ணெயை அரசாங்கம் விற்பனை செய்வது ஏன்? திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னது என்னாச்சு? பாமாயில் விற்பனை செய்வதால் அரசுக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது என்றும் கேள்விகளை எழுப்பினார்கள்.

இந்நிலையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.. இதனால், திருப்பூர் - கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. விவசாயிகள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயிகள்: முன்னதாக கைதான விவசாயிகள் சொல்லும்போது, "உள்நாட்டு எண்ணெய் வித்துக்களான தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளுக்கு ஊக்குவிப்பு செய்யாமல், மானியம் வழங்காமல், இந்தோனேசிய- மலேசியா பாமாயிலை லிட்டர் ரூ. ரூ.100க்கு மத்திய, மாநில அரசுகள் வாங்கி ரூ.30க்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்கிறார்கள். இதனால், ஒரு லிட்டருக்கு 70 ரூபாய் மானியம் கொடுத்து விற்பனைசெய்து கொண்டிருக்கிறது

ஒவ்வொரு மாதமும் 2 கோடி லிட்டர் பாமாயிலை தமிழக அரசு கொள்முதல் செய்கிறது.. வருடந்தோறும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் ரூ.1500 கோடிகளை மானியமாக பாமாயில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.

நஷ்டம்: கடந்த 2019ல் ரூ.20 க்கு விற்பனையை கொண்டிருந்த தேங்காய், இப்போது ரூ.10க்கு மட்டுமே விற்பனையாவதால் 22 மாவட்டங்களில் உள்ள தமிழ்நாட்டின் 20 லட்சம் தென்னை விவசாயிகள் கடுமையான நஷ்டத்தில் இருக்கிறார்கள்.. கூலி கூட கிடைக்காமல் கடும் கஷ்டத்தில் உள்ளார்கள். அதனால், பாமாயில் இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும்... பாமாயிலுக்கு பதிலாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும்" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+