ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி.. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.. சென்னை போலீஸ் சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி".. என்று சென்னை போலீசார் புரிய வைத்துள்ளனர்.. என்ன நடந்தது சென்னை ஏர்போர்ட்டில்?

ரேஷன் கார்டுகள் யாராலுமே தவிர்க்க முடியாத முக்கிய ஆவணமாகிவிட்டது.. இந்த கார்டு இருந்தால் மட்டுமே, அரசின் சலுகைகளை நம்மால் பெற முடியும்.. "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு", திட்டத்தை மத்திய அரசு தொடங்கியதன் மூலம் பல நன்மைகளை மக்கள் பெற்று வருகிறார்கள்.

Ration Card Holders in Tamil Nadu and Convict of smuggling Ration goods arrested in Chennai Airport by Police

வசதிகள்: நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரை, பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், நிறைய அறிவிப்புகளையும், நிறைய வசதிகளையும் செய்து வருகிறது.. இதனால், அரிசி அட்டைதாரர்களின் சுமையையும் குறைந்து வருகிறது. ஆனால், ரேஷன் அரிசி கடத்தல்களை மட்டும் முழுமையாக ஒழிக்க முடியாமல் உள்ளது.

முக்கியமாக, கேரளம், ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.. தமிழக எல்லைகளில் இதற்காகவே சில புரோக்கர்கள் இருக்கிறார்களாம்... இவர்கள்தான், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு, இந்த ரேஷன அரிசியை விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்களாம். இவர்களால்தான், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி முறையாக கிடைப்பதில்லை என்ற புகார்களும் பெருகிவருகின்றன.

கடத்தல் அரிசி: எனவே, இந்த கடத்தலை ஒழிக்க தமிழக அரசும் எத்தனையோ விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததன் அடிப்படையில், தற்சமயம் ஓரளவு ரேஷன் பொருட்கள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, வெறும் 5 மாதங்களில், 3,660 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரேஷன் பொருளை கடத்தி 3,794 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதோ, ரேஷன் பொருட்களை பதுக்கிய நபரை, நீண்ட காலம் கழித்து தற்போது கைது செய்தும் உள்ளார்கள்.

சென்னையை சேர்ந்தவர் குமார் முகமது கலித்.. 29 வயதாகிறது.. எப்போதுமே ரேஷன் அரிசியை கடத்துவதுதான் குமாரின் பிரதான தொழிலாக இருந்து வந்துள்ளது.. எனவே இவர்மீது, ரேஷன் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கடத்தல், பதுக்குதல் உள்ளிட்ட வழக்குகள், சிவில் சப்ளை குற்றப்பிரிவு சிஐடி போலீசில் நிலுவையில் இருக்கிறது.

குற்றப்பிரிவு போலீஸ்: ஆனால், போலீசில் குமார் சிக்கவேயில்லை.. சிவில் சப்ளை குற்றப்பிரிவு சிஐடி போலீசார், இவரை கைது செய்து விசாரணை நடத்துவதற்காக தேடிக்கொண்டே இருந்தார்கள்.. 3 மாதமாக இதற்காகவே பிரத்யேகமான முயற்சிகளையும் முன்னெடுத்து வந்தனர்.. ஆனால் குமார் போலீசுக்கே தண்ணி காட்டி கொண்டேயிருந்தார்.

ஆனால், எப்படியும் தமிழநாட்டு போலீஸ், தன்னை பிடித்துவிடுவார்கள் என்பதால், இங்கிருந்து தப்பி வெளிநாட்டுக்கு சென்றுவிடலாடம் என்று குமார் திட்டம் தீட்டினார்.. நம்முடைய போலீசாரிடம் இந்த பாட்சா பலிக்குமா என்ன?

அதிரடி போலீஸ்: வெளிநாட்டுக்கு குமார் தப்பிவிடாதவாறு, ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டுவிட்டது.. இதுதெரியாமல், மலேசியாவுக்கு செல்வதற்காக குமார், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்தார்..

மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், அப்போது புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. சென்னை ஏர்போர்ட்டுக்குள் குமார் வேக வேகமாக நுழைந்தார்.. அவரது பாஸ்போர்ட் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் ஆய்வு செய்தபோதுதான், இவர் சிவில் சப்ளை குற்றப்பிரிவு சிஐடி போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிய வந்தது...

சுற்றிவளைப்பு: உடனே குடியுரிமை அதிகாரிகள், குமார் முகமது கலித் பயணத்தை ரத்து செய்து, அங்கிருந்த ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர்.. அதுமட்டுமல்லாமல், சிவில் சப்ளை குற்றப்பிரிவுக்கும் தகவல் தந்தார்கள்.. இதையடுத்து, சிவில் சப்ளை குற்றப்பிரிவு சிஐடி போலீசார் ஏர்போர்ட்டுக்குள் நுழைந்து, குமாரை அதிரடியாக கைது செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்கள்.

பொதுமக்களின் உணவுப்பொருட்களில் கை வைப்பவர்கள் மீது, உடனுக்குடன் நடவடிக்கையை நம் போலீசார் எடுத்து வருவது, மிகுந்த ஆறுதலையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+