ரேஷன் கார்டும்.. ஸ்டாலின் அரசும்.. இத்தனை மாற்றங்களா.. நம்பவே முடியாத திருப்பங்கள்
சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆயிரம் ரூபாய் தருவதாக அறிவித்தாலும், அறிவித்தது, மக்களின் கவனம் முழுவதும் ரேஷன் கார்டு மீதுதான் இருக்கிறது. அதுபற்றி அறிவிப்பிற்காக இரண்டு வருடங்களாக காத்திருந்த மக்களுக்கு வரும் அக்டோபரில் இருந்து பணம் வரப்போகிறது. விஷயம் அதுவல்ல, ரேஷன் கார்டு விவகாரத்தில் பல்வேறு மாற்றங்கள் நடந்திருக்கிறது அதுதான்.
தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்காக மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்படும் திட்டம் என்றால் அது பொதுவிநியோகத்திட்டம். ரேஷன் கார்டு வைத்துள்ள மக்களுக்காக இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகிறது.

ரேஷன் கடைகளில் பல்வேறு விஷயங்கள் படிப்படியாக ஆன்லைன் முறைக்கு மாறின. பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடங்கி, பணம் பெறுவது வரை பல்வேறு விசயங்கள் ஆன்லைனுக்கு மாறி உள்ளன.
ஒரே நாடு ஒரே அட்டை திட்டத்தின் கீழ் எந்த ஊரில் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களும் முகவரியை மாற்றாமல், தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் ரேஷனில் பொருட்களை வாங்கிக்கொள்ள முடிகிறது. இதேபோல் ரேஷன் கடைகளில் தற்போது கேழ்வரகு விநியோகம் செய்யவும் அரசு திட்டமிட்டு வருகிறது. முதற்கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் அறிமுகமும் செய்யப்பட்டது.

இதேபோல் புதிய ரேஷன் கார்டை ஆன்லைனிலேயே பெரும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது. நகல் ரேஷன் கார்டை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் என்றாலும், ஆனால் பணம் செலுத்தவும், கார்டை பெறவும் நேரில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் தொலைந்து போன அல்லது பெயர் அல்லது ஊர் திருத்தங்கள் மேற்கொண்ட ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய ரேஷன் கார்டுகளை இனி தபால் மூலம் பெற முடியும்
அமைச்சர் உதயநிதி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்த திட்டத்தின் படி, விண்ணப்பதாரர்கள், வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு செல்லாமல் இணைய வழியிலேயே புதிய ரேஷன் கார்டுக்கான பணத்தை செலுத்தி, தபால் மூலமாக புதிய ரேஷன் கார்டை பெற்றுக்கொள்ள முடியும்.
ரேஷன் கடைகளில் இதுவரை பணம் கொடுத்து மட்டுமே பொருட்களை மக்கள் வாங்கி வந்த நிலையில், டிஜிட்டல்முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த யுபிஐ பேமண்ட் வசதி, தமிழகம் முழுவதும் விரைவில் கொண்டுவரப்படஉள்ளது.

ரேஷனில் உள்ள பொருட்களைஇருப்பையும், ரேஷன் கடை திறந்து உள்ளதா என்பதையும் அறியவும்தொலைப்பேசி எண்ணும் அரசு அறிவித்துள்ளது. வீட்டில் இருந்தபடியே இந்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். 9773904050 என்ற நம்பருக்கு PDS 102 என்று குறுஞ்செய்தி அனுப்புங்கள் போதும். ரேஷன் கடை திறந்து உள்ளதா என்று தெரிந்து விடும்.
தமிழகம் முழுவதும் உள்ள பல பழமையான ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்டவும் அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய ரேஷன் கடைகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. மக்கள் முன்பை விட இப்போது ரேஷன் குறித்து அறிய அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். 1000 ரூபாய் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து அரசு எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications