Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.500 நோட்டுக்கள்.. அடுத்த பகீரை கிளப்பிய ரிசர்வ் வங்கி.. ஏற்கனவே ரூ.2000 பஞ்சாயத்து.. இப்ப இது வேற

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் ஒப்படைத்துவிட்ட நிலையில், 500 ரூபாய் குறித்த முக்கிய தகவல் ஒன்றை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் உத்தரவிட்டது. அத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும், அதற்குள் அருகிலுள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

RBI rs500 and 500 rupees fake notes count increase in India, says Reserve Bank of India RBI

அதிர்ச்சி: அதன் பிறகு டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, திருவனந்தபுரம் உட்பட ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டும் இந்த வசதி கிடைத்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் ரிசர்வ் வங்க ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டிருந்தது..

அதாவது கடந்த மே 19ம் தேதி, 2000 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப்பெறுவதாக, ரிசர்வ் வங்கி அறிவித்தபோது, அன்றை தினத்தில் ரூ3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன..

நவம்பர் மாதம்: ஆனால், கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி நிலவரப்படி, இந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 97.26 சதவீதம் மட்டுமே வங்கிகளுக்கு திரும்பியிருக்கிறதாம். மிச்சம் ரூ.9,760 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பவில்லை என்றும் இன்னமும் அவை எங்கேயோ முடங்கி கிடக்கிறது என்றும் கவலையை வெளிப்படுத்தியிருந்தது.

இப்போது இன்னொரு தகவலை வெளியிட்டிருக்கிறது. 500 ரூபாயில் கள்ள நோட்டுக்கள் அதிகரித்துவிட்டதாம்.. இந்த 20223ம் ஆண்டு நிலவரப்படி, 91,110 ரூபாய் 500 போலி நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. இது இதற்கு முந்தைய ஆண்டை விட 14.6 சதவீதம் அதிகமாகும்.

ரிசர்வ் வங்கி: இப்படி போலி 500 ரூபாய் பெருகிவருவது ரிசர்வ் வங்கிக்கு அடுத்த கவலையை உண்டுபண்ணியிருக்கிறது. கள்ள நோட்டுகளின் ஊடுருவலை தடுக்க எத்தனை விதமான முயற்சிகளை ரிசர்வ் வங்கி செய்து வருகிறது..

ஆனாலும், போலி நோட்டுக்களின் புழக்கம் குறையவில்லை.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடுத்தக்கட்ட முயற்சிகளில் இறங்கி உள்ளனர்.. அத்துடன், பொது மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், போலி நோட்டுகளை அடையாளம் காண, கூடுதலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறதாம்.

ரூ.2000 நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில், இப்போது, ரூ.500 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு (RBI) கடும் சிக்கலை உண்டாக்கியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+