"கடைசியா என்கிட்ட இதைதான் அவ சொன்னா".. சித்ராவின் அம்மா விஜயா பரபரப்பு பேட்டி..!
சித்ராவின் மரணம் தொடர்பாக குடும்பத்தாரிடம் ஆர்டிஓ விசாரணை நடக்கிறது
சென்னை: "எந்தவொரு தாயால், பெற்ற மகளுக்கு மனஉளைச்சல் வருமா? எந்த தாயுமே மகளின் தற்கொலைக்கு காரணமாக இருக்க மாட்டார்.. சித்ரா தற்கொலைக்கு முழுக்க, முழுக்க ஹேமந்த் தான் காரணம்" என்று தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் அம்மா விஜயா பரபரப்பு பேட்டிஅளித்துள்ளார்.
Recommended Video

நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு அவரது குடும்பத்தினர் ஆஜராகிய நிலையில், அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த்திடம் கடந்த 5 நாட்களாக விசாரணை நடந்து வந்தது.. அப்போது ஹேமந்த் முன்னுக்கு பின் முரணான தகவல்களை சொல்லி வருவதாகவும், ஆனால் அவர் சொன்ன அனைத்து வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த மரணம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை இன்று தொடங்கியது.. ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணையை தொடங்கி உள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்தது. முதல் விசாரணையே சித்ராவின் பெற்றோர்தான்.
சித்ராவின் அப்பா காமராஜ், அம்மா விஜயா, சகோதரி சரஸ்வதி ஆகியோரிடம் விசாரணை தனித்தனியாக நடத்தப்பட்டது. தன் மகள் மரணத்துக்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்து தர வேண்டும் என்று சித்ராவின் அப்பா ஏற்கனவே போலீசில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், வரதட்சணை கொடுமை இதில் நடந்துள்ளதா என்று ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.. அதன்படியே இன்று ஆர்டிஓ விசாரணை நடந்தது. கல்யாணத்துக்கு சித்ராவுக்கு 50 சவரன் நகையும், ஹேமந்த்துக்கு 20 சவரன் நகையும் தர போவதாக ஏற்கனவே சித்ராவின் பெற்றோர் சொல்லி இருந்தனராம்.. அது சம்பந்தமாக சித்ராவின் அப்பாவும் தன் புகாரில் கூறியிருந்ததால், இன்று அதுகுறித்தும் விசாரணை நடந்ததாக தெரிகிறது.
மேலும், சித்ரா - ஹேமந்த் ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்டதால், அதற்கான திருமணம் சான்றிதழும் கோரப்பட்டிருந்தது. அத்துடன் நிச்சயதார்த்த போட்டோக்களும் விசாரணையின்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முன்பு சித்ரா பேசியது என்ன? வாக்குவாதம் நடந்தது உண்மைதானா போன்ற கேள்விகள் சித்ராவின் அம்மா விஜயாவிடம் எழுப்பப்பட்டதாக தெரிகிறது.
கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு வெளியே வந்த சித்ராவின் பெற்றோர் செய்தியாளர்களை சந்தித்தனர்... "விசாரணை முடிந்த பின்பு முழு தகவலை அளிக்கிறோம், ஊடகங்கள் தவறான தகவலை சொல்கிறார்கள்.
எந்தவொரு தாயால மகளுக்கு மனஉளைச்சல் வருமா? எந்த தாயமே மகளின் தற்கொலைக்கு காரணமாக இருக்க மாட்டார்.. சித்ரா தற்கொலைக்கு முழுக்க, முழுக்க ஹேமந்த் தான் காரணம்.. அதுக்கான விவரங்களை ஆர்டிஓ விசாரணையில் சொல்லி உள்ளோம்.. விசாரணைக்கு கூப்பிடும்போது மறுபடியும் ஆஜராவோம்.
என்கிட்ட போனில் பேசினாள்.. ஆனா எதுவும் சொல்லல.. நார்மலாதான் பேசினாள்.. ஸ்டார்ட் மியூஸிக்கில் இருக்கேன்..ம்மான்னு சொன்னாள்.. எப்போ ஷூட்டிங் முடியும்னு கேட்டேன்.. லேட்டாகும்னு சொன்னாள்.. அவ்வளவுதான்.. சண்டையே நடக்கல" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications