நிலத்தை வைத்திருப்போருக்கு அறிவிப்பு.. பதிவு செய்யாவிட்டால் அபராதம்.. ரியல் எஸ்டேட் ஆணையம் அதிரடி
சென்னை: ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும், வீடு, மனைகளுக்கு தலா, 15,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து புதிய உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறது.
வீட்டுமனை திட்டங்களில் உண்டாகும் சர்ச்சைகளை களைவதற்காகவும், விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம்-2016 என்ற நடைமுறையை மத்திய அரசு உருவாக்கியிருந்தது.

மனை விற்பனை: இதனடிப்படையில், தமிழக அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.112, நாள் 22.6.2017 மூலம் தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமைக்கப்பட்ட "தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்" (Tamil Nadu Real Estate Regulatory Authority TNRERA) செயல்பட்டு வருகிறது.
மேலும், கடந்த 2016ல், இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ரியல் எஸ்டேட் திட்டங்களை பதிவு செய்யவும், அது தொடர்பான புகார்களை விசாரிக்கவும், மாநில ஆணையங்கள், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, 5,381 சதுர அடி அல்லது 8 வீடு மனைகள் இருந்தால், அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்வது கட்டாயமாகும்..
புகார்கள்: ஒருவேளை, ஆணையத்தில் பதிவு செய்யாமல், வீடு, மனைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது, புகார் விசாரணைக்கு வரும்போது, 1 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை என, பொதுவான கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது.. இதற்கான நடைமுறைகளை மாற்ற ஆணையம் முடிவு செய்துள்ளது.. இது தொடர்பாகவே புதிய உத்தரவையும் தற்போது பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
"ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்யாமல், விற்கப்படும் வீடு, மனைகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி பகுதியில், தலா, 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அபராதம்: மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், ஆவடி, தாம்பரம், வேலூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், தூத்துக்குடி மாநகராட்சிகளில், தலா, 12,000 ரூபாய் அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பெருநகர எல்லையில் வரும் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், கடலூர், காஞ்சிபுரம், கரூர், சிவகாசி, கும்பகோணம், காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாநகராட்சிகளில் தலா, 10,000 ரூபாய் அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அபராதம்: மற்ற நகராட்சிகளில் வீடு, மனைகளுக்கு தலா, 6,000 ரூபாய், பேரூராட்சிகளில் தலா 4,000 ரூபாய், ஊராட்சிகளில் தலா, 3,000 ரூபாய் என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும். இந்த தொகையை விதிக்கும் போது, மனைப்பிரிவு திட்டங்களில் அதன் மொத்த மதிப்பில் 2 சதவீதம்.. அடுக்குமாடி குடியிருப்பு என்றால், அதில் விற்கப்பட்ட வீடுகளின் மதிப்பில், 1 சதவீதம் ஆகியவற்றில், எது அதிகம் என்ற அடிப்படையில் முடிவு செய்யப்படும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications