ரியல் எஸ்டேட் அவ்ளோதானா? சேலம் + திருப்பூர் + கோவை + மதுரை வளர்ச்சி திட்டம்.. கோட்டைக்கு போன லெட்டர்
சென்னை: கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் ஓசூர் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கை பறந்துள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர்- தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.. அந்த கடிதத்தில், உள்ளதாவது:
"தங்களின் சீரிய தலைமையின் கீழ் தமிழகம் அனைத்து துறைகளிலும் நாளும் வளர்ச்சி பெற்று வருகிறது. குறிப்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து சீர்தூக்கி செம்மைப்படுத்தி வளர்ச்சியும் எழுச்சியும் பெற்றுள்ளது.

திருச்சி, மதுரை: தமிழகத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் மாநகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் ஓசூர் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சீரற்ற வளர்ச்சிகளை ஒழுங்குபடுத்த முழுமையான திட்டங்களை கொண்டு, ஒழுங்கு மற்றும் சீரான அபிவிருத்தி மற்றும் விரிவான திட்டங்கள் மூலம் கட்டுமானங்களுக்கான திட்ட அனுமதியை விரைவுபடுத்தவும் நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் உருவாக்க வேண்டும்.
இத்தகைய தொலைநோக்கு திட்டத்தின்கீழ் கடந்த 2021-2022ம் ஆண்டு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்து, கடந்த 2022ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
கிணற்றில் கல்: எனினும், மேற்கண்ட பகுதிகளில் இதுவரை நகர்ப்புற வளர்ச்சி குழுமம் கட்டமைப்பதற்கான எவ்வித ஆக்கபூர்வமான செயல் திட்டங்கள் முன்னெடுக்காமல், கிணற்றில் போட்ட கல்லை போல் கிடப்பில் இருக்கிறது.
கோரிக்கை: இவற்றை விரைந்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் மேற்கண்ட பகுதிகளில் அடிப்படை வளர்ச்சி, உள்கட்டமைப்பு, கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை மாபெரும் வளர்ச்சி பெறும். தாங்கள் இதை கூடுதல் கவனத்தில் எடுத்துக் கொண்டு, மேற்கண்ட பகுதிகளில் நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களை நிறுவி, அதன் கட்டமைப்புகளை விரைந்து முடிக்க ஆலோசனைக் குழு மற்றும் திட்டமிடல் பிரிவுகளை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் ஆ.ஹென்றி கேட்டுக்கொண்டுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications