வரலாற்றுச் சாதனை! டெல்டா, டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் அதிகரிப்பு! அமைச்சர் பெருமிதம்
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் உணவுத்துறை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார் தமிழ்நாடு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அதில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளதாகவும் தற்போது சாகுபடி பரப்பு 6.37 லட்சம் ஏக்கராக உள்ளதாகவும் இது வரலாற்றுச் சாதனை என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான நிகழ்வவுகளுக்கிடையே தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தின் போது மறைந்த உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று இரண்டாம் நாள் நிகழ்வில் கரூர் சம்பவம் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது. எதிர்க்கட்சியினரின் கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். இந்த நிலையில் சட்டசபையின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது.

இந்த கூட்டத்தில் உணவுத்துறை தொடர்பாகவும், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதாக அதிமுகவினர் கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்து பேசினார். இதுதொடர்பாகப் பேசிய அவர்," டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நெல் குறுவை சாகுபடியானது கடந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கராக இருந்தது. தற்போது 6.31 லட்சம் ஏக்கராக உள்ளது. இது வரலாற்று சாதனையாக உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 மடங்கு நெல் உற்பத்தி வரத்து அதிகரித்துள்ளது. முதல்வர் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி ஒரு ஆய்வு கூட்டத்தை நடத்தினார். அப்போது டெல்டா மாவட்டங்களுக்கு சென்று உடனடியாக விவசயிகள் உற்பத்தி செய்துள்ள நெல்லை பெற்று அதை சேமித்து வைத்து மற்ற மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தார். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தாண்டு குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆறுகள், ஏரிகள் முறையாக தூர்வாரப்பட்டதாலும், குறுவைத் திட்டத் தொகுப்பு முறையாக விநியோகம் செய்யப்பட்டதாலும், டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியானது கடந்த ஆண்டு 3.5 இலட்சம் ஏக்கராக இருந்தது, இந்தாண்டு 6.13 இலட்சம் ஏக்கராக அதிகரித்து வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது!
அதனடிப்படையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அறுவை ஆலைகளுக்கு துரிதமாக அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டதை விட, திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு அதிகளவிலான சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் 3.3 லட்சம் மெட்டிக் டன் கொள்ளவு கொண்ட 25 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு 77.196 மெட்டிக் டன் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நெல் தேக்கம் குறித்தும், 3.3 இலட்சம் மெ.டன் கொள்ளளவு கொண்ட 25 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகள் திறக்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications