Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி குறைப்பு! பயணிகள் அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் சாமானிய மக்கள் பயணிக்கும் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு பதிலாக, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தென்மாவட்ட மக்களின் தேவைக்காக தினமும் திருநெல்வேலிக்கு சென்னையிலிருந்து நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது இரவு 8.40 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி என காலை 6.40 மணிக்கு 10 மணி நேரம் பயணித்து திருநெல்வேலிக்கு சென்று சேர்கிறது.

Nellai Express Pothigai Express Southern Railway

அதேபோல இரவு திருநெல்வேலியிலிருந்து 8.40 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்து சேர்கிறது. இது சூப்பர் பாஸ்ட் ரயிலாக இருந்தாலும் பல நிறுத்தங்களில் நின்று செல்வதால் தென் மாவட்ட மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதில் ஸ்லீப்பர் வகுப்பு கட்டணம் ரூ.395 ஆகவும், மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.1,040, 2ம் வகுப்பு ஏசி ரூ.1,460, முதல் வகுப்பு ஏசி ரூ.2,440 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ரயிலில் மொத்தம் 21 பெட்டிகள் இருக்கின்றன. இதில் உணவு தயாரிப்புக்காக ஒரு பெட்டியும், லக்கேஜ் ரேக்குக்காக ஒரு பெட்டி என கழித்துவிட்டால் மொத்தம் 19 பெட்டிகள். இதில் என்ஜினுக்கு பின்னால் 2 பெட்டிகளும், கடைசியாக இரண்டு பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்கு ஒதுக்கப்படும். மீதம் உள்ளவற்றில் 8 பெட்டிகள் ஸ்லீப்பர் பயணிகளுக்கு, அதாவது ரூ.395 கொடுத்து டிக்கெட் எடுத்து பயணிக்கும் பயணிகளுக்கு ஒதுக்கப்படும்.

மூன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பயணிகளுக்கு 5 பெட்டிகளும், முதல் வகுப்பு ஏசி பயணிகளுக்கு 2 பெட்டிகளும் ஒதுக்கப்படும். இப்போது சிக்கல் என்னவெனில், ஸ்லீப்பர் பயணிகளுக்கு என ஒதுக்கப்பட்ட 8 பெட்டிகளில் ஒன்று குறைக்கப்பட்டு, 7 பெட்டிகளாக மாற்றப்பட்டிருக்கிறது. இதை ஈடுகட்ட மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் கூடுதலாக ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் சாமானிய மக்கள் ரயில் பயணத்தை அணுகுவது சவாலானதாக மாறியிருக்கிறது.

இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், "ஒரு ஸ்லீப்பர் பெட்டிதானே என்று சாதாரணமாக இதை கடந்துவிட முடியாது. ஒரு பெட்டியில் 72 பயணிகள் வரை பயணிக்க முடியும். தெற்கு ரயில்வேயின் இந்த பெட்டி குறைப்பால், 72 சாமானிய பயணிகள் இனி எங்கு போவார்கள்? கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.250-300 என்றுதான் இருக்கிறது. இவர்களை போன்ற ஏழை மக்களுக்காககத்தான் இந்த பெட்டிகள் இருக்கின்றன. இதையும் குறைத்துவிட்டால்.. அவர்களால் எப்படி பயணிக்க முடியும்? ஏசி பெட்டியில் ரூ.1040 கொடுத்து பயணிக்க முடியாது" என்று கூறியுள்ளனர்.

Nellai Express Pothigai Express Southern Railway

நெல்லை எக்ஸ்பிரஸ் மட்டுமல்லாது, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலிலும் பெட்டிகள் குறைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பயணிகள், தெற்கு ரயில்வே தனது முடிவை வாபஸ் பெற வேண்டும். சாதாரண ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+