தூத்துக்குடியில் நிம்மதி.. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றினாலும் கண்காணிக்க வேண்டும்: தீர்ப்பாயம்
சென்னை: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (National Green Tribunal) ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளைத் தீர்த்து வருகிறது.. நீர்நிலை ஆக்கிரமிப்புகள், தொழிற்சாலைகளின் சுற்றுச்சூழல் விதிகளை மீறுதல் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்ப்பு வழங்குவதோடு, இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. அந்தவகையில் தற்போதும் ஒரு முக்கிய உத்தரவினை அரசு அதிகாரிகளுக்கு பிறப்பித்திருக்கிறது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) மற்றும் உயர் நீதிமன்றங்கள் போன்ற நீதிமன்றங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன..

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு
இதில் அதிகாரிகளின் செயலற்ற தன்மையை கண்டிப்பது, நீர்நிலைகளை அவற்றின் அசல் நிலைக்கு மீட்டெடுக்குமாறு உத்தரவிடுவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நீர்நிலைகளை பாதுகாக்க குழுக்கள் அமைப்பது என்பது போன்ற ஏராளமான நடவடிக்கைகளை இவை மேற்கொண்டும் வருகின்றன.
குறிப்பாக, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், மக்களின் நலனுக்காக நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் பல நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதுடன், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் முறையாக செயல்படுவதில்லை என்று கண்டித்தும் இருக்கின்றன.
உப்பாற்று ஓடை ஆக்கிரமிப்பு
அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டம் உப்பளம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, தமிழக அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது..
காரணம், 2015, மற்றும் 2023ல் ஏற்பட்ட பெரு வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தை கடுமையாக பாதித்துவிட்டது.. இந்த மழை வெள்ளத்தில், நகரில் பெரும்பாலான பகுதிகள் மூழ்கின. காட்டாற்று வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணம், தூத்துக்குடியின் வடிகாலான உப்பாற்று ஓடை ஆக்கிரமிக்கப்பட்டதே என்று பலரும் கூறினார்கள்..
விளாத்திகுளம் உப்பளம்
விளாத்திகுளம் பகுதியில், கடலோர கிராமங்களில், வைப்பாறு ஆற்றின் கிளை ஆறுகள், காட்டு ஓடைகளை ஆக்கிரமித்து, உப்பு தயாரிக்கும் தொட்டிகளை பலர் அமைத்துள்ள நிலையில், இதனால்தான் இயற்கையான நீர்வழித்தடங்களில் நீர் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும், மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்பட, இந்த ஆக்கிரமிப்பு தான் காரணம் என்றும் கடந்த 2023 டிசம்பரில், மீடியாக்களில் செய்தி வெளியானது.
இதன் அடிப்படையில் தீர்ப்பாயமும் இதனை முன்வந்து விசாரித்தது.. அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற, தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் ஆகியோர் தற்போது அளித்த தீர்ப்பின் விவரம் இதுதான்:
நீர்வழித் தடங்களுக்கு தடை
"விளாத்திகுளம் பகுதி கடலோர கிராமங்களில், உப்பு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாக, துாத்துக்குடி மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. ஆனால், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில், ஆறுகளை ஒட்டி உப்பு தயாரிப்பு நடப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2023ல் ஏற்பட்ட கடுமையான வெள்ள பாதிப்புக்கு, இந்த ஆக்கிரமிப்புகள் காரணம் என கூறப்படுகிறது. இயற்கையான நீர்வழித்தடங்களுக்கு தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான் அரசின் கடமை.
ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை
விளாத்திகுளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இன்றுவரை சம்பந்தப்பட்ட நீர்நிலைகளில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்றும், தூத்துக்குடி கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்..
எனினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஏதாவது ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications