வாடகை ஒப்பந்தம் அவசியம்.. லீஸூக்கு போறீங்களா? அதென்ன 11 மாதத்துக்கு மட்டும் குத்தகைக்கு அக்ரிமென்ட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குத்தகைக்கு வீட்டிற்கு செல்வோர், உரிமையாளர்களிடம் வாடகை ஒப்பந்தம் செய்து கொள்ள சொல்வது ஏன் தெரியுமா? 11 மாதங்களுக்கு மட்டும் வாடகை ஒப்பந்தம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? கட்டாயம் இதை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.

நில உரிமையாளருக்கும் குத்தகைதாரருக்கும் இடையே செய்துகொள்ளும் ஒப்பந்தம்தான், வாடகை ஒப்பந்தமாகும்.. சொத்து தொடர்பாக இவர்களுக்குள் ஏதேனும் சிக்கல், தகராறு ஏற்பட்டால், இந்த வாடகை ஒப்பந்தம் ஆதாரமாக திகழும்.

rent lease house house owners

மேலும், குத்தகைதாரர்மற்றும் வீட்டின் உரிமையாளரின் உரிமைகள் என்னென்ன? பொறுப்புகள் என்னென்ன? வாடகை, வீட்டின் பயன்பாடு, பாதுகாப்பு வைப்பு, வாடகை காலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த வாடகை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஒப்பந்தம்: லீசுக்கு குடியிருப்பதால், மாதா மாதம் வாடகை கட்ட தேவையில்லை என்றாலும், இந் வாடகை ஒப்பந்தத்தை போட்டுக் கொள்வது அவசியமாகும். வழக்கமாக 11 மாதங்கள் என்ற அளவில் தான் லீஸ் ஒப்பந்தம் போடப்படும். லீசுக்கு உள்ளவர், ஒரே நபராக இருந்து பலமுறை புதுப்பித்தாலும்கூட, 11 மாதத்திற்குத் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

இதற்கு காரணம், பதிவுச்சட்டம், 1908-ன் பிரிவு 17-ன் கீழ் ஒரு வருடத்திற்கும் குறைவான குத்தகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட வேண்டிய தேவையிருக்காது.. இதனால் உரிமையாளர், குடியிருப்பவர் என இரு தரப்பிலுமே பதிவு செய்வதில் சிக்கலை தவிர்க்க முடியும்.

வாடகை ஒப்பந்தம்: இந்த வாடகை ஒப்பந்த பத்திரங்களை இதற்கு பதிவு தேவையில்லை.. இதனால் முத்திரை கட்டணத்தையும் தவிர்க்க முடியும்.. அதேபோல, வாடகை ஒப்பந்தத்தையும் எத்தனை முறை வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம் அல்லது நீட்டிக்கலாம்.. அந்தவகையில், 11 மாத குத்தகை ஒப்பந்தமானது, குத்தகைதாரர்களை காட்டிலும் வீட்டின் உரிமையாளர்களுக்கே அதிகளவில் சாதகமாக அமைகிறது.

ஒருவேளை 11 மாதங்கள் முடிவடைந்துவிட்டால், அதே வீட்டில் குடியிருக்க 2 தரப்பினருமே விரும்பினால், ஒப்பந்தத்தை மேலும் 11 மாதத்திற்கு நீட்டித்துக்கொள்ளலாம்... அப்படி நீட்டிக்கும்போது, ஒருசில ஓனர்கள் லீஸ் தொகையை சற்று கூடுதலாக உயர்த்தி கேட்க வாய்ப்புள்ளது. எனவே, குடியிருப்பவர்கள் அதை விரும்பினால், அதே வீட்டில் இருக்கலாம். அல்லது லீஸ் தொகையை முழுதாக திரும்பப் பெற்றுக்கொண்டு வீட்டை காலி செய்து கொள்ளலாம்.

ஒயிட்வாஷ்: அதேபோல, லீஸ் ஒப்பந்தம் போடும்போதே, வீட்டுக்கு ஒயிட்வாஷ் செய்வது யார் என்பதில் முடிவெடுத்து கொள்ள வேண்டும்.. வீட்டுக்கு வெள்ளையடிப்பது வாடகைதாரர் என்றால், அதையும் பத்திரத்திலேயே குறித்து கொள்ள வேண்டும்.. அதுமட்டுமல்ல, லீசுக்கு இருப்பவர்களை உடனே காலி செய்ய சொல்ல முடியாது.. 3 மாதமாவது அவகாசம் தரவேண்டும்.

அதேபோல, லீசுக்கு உள்ளவருக்கு பணம் தேவைப்பட்டால், பணத்தை திருப்பித் தர, வீட்டின் ஓனருக்கும் 3 மாதங்கள் டைம் தர வேண்டும். ஒத்தித்தொகையை திருப்பியளிக்க ஓனர் மறுத்தால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம்.

ஆவணங்கள்: லீசுக்கு வீடு எடுப்பதற்கு முன்பு, ஒரு சட்ட ஆலோசகரின் மூலமாக அந்த வீட்டின் உரிமை ஆவணங்களை (Title Deeds) முழுவதும் வாங்கி சரிபார்த்து, அந்த வீட்டை ஒத்திக்கு விடும் நபர் சரியானவர்தானா என்பதை தெரிந்து கொள்ளுதல் முக்கியம்.. வேண்டுமானால், வழக்கறிஞரின் ஆலோசனை பெற்றபிறகு ஒத்திக்குச்செல்வது இன்னும் சிறப்பான செயலாக இருக்கும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+