புகழ்பெற்ற பள்ளிகள் இடஒதுக்கீடு விதிகளை மதிப்பதில்லை.. அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு..!
சென்னை: தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள அதிகக் கட்டணம் வசூலிக்கும் புகழ்பெற்ற பள்ளிகள் தான் அரசின் இடஒதுக்கீட்டு விதிகளை மதிப்பதில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மாநில அரசின் 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் தமிழக அரசின் இந்த இடஒதுக்கீடு சதவீதம், மெட்ரிக் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இடஒதுக்கீடு முறை
தமிழ்நாட்டில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவுபடி, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 31 சதவிகிதம், SC பிரிவினருக்கு 18 சதவிகிதம், ST பிரிவினருக்கு 1 சதவிகிதம், MBC பிரிவினருக்கு 20 சதவிகிதம், BCM பிரிவினருக்கு 3.5 சதவிகிதம், BC பிரிவினருக்கு 26.5 சதவிகிதம் என்ற விகிதத்தில் இடஒதுக்கீடு அமைய வேண்டும் எனவும், பொதுப்பிரிவினரில் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி 31 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கிறதா என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசுக்கு பாராட்டு
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இடஒதுக்கீட்டை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை ஆணையிட்டிருக்கிறது. மாணவர் சேக்கையில் சமூக நீதியை நிலைநாட்ட பள்ளிக் கல்வித் துறை காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

அன்புமணி குற்றச்சாட்டு
தொடர்ந்து தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அவை தமிழக அரசின் இடஒதுக்கீட்டை கடைபிடிப்பது கட்டாயமாகும். ஆனால், பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் 69 சதவிகித இடஒதுக்கீட்டை கடைபிடிப்பதில்லை. ஊரகப்பகுதிகளில் உள்ள சாதாரண மெட்ரிக் பள்ளிகள் 69 சதவிகித இடஒதுக்கீட்டை பின்பற்றுகின்றன. ஆனால் நகர்ப்புறங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் புகழ்பெற்ற பள்ளிகள் தமிழக அரசின் இடஒதுக்கீட்டு விதிகளை மதிப்பதில்லை. அவை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

வெள்ளை அறிக்கை தேவை
மேலும், அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69 சதவிகித இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை முடிவடைந்த பிறகு பள்ளி வாரியாக இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications