ஓபிஎஸ் கோரிக்கை.. “கணவன் அங்கே.. மனைவி இங்கே”.. அமைச்சர் பதிலால் குலுங்கி குலுங்கி சிரித்த சபாநாயகர்
சென்னை : சட்டப்பேரவையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் வைத்த கோரிக்கைக்கு அமைச்சர் கே.என்.நேரு அளித்த பதிலால் சபாநாயகர் அப்பாவு குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.
இன்று சட்டசபையில் வார்டு மறுவரையறை தொடர்பாக ஈஸ்வரன் எம்.எல்.ஏ கோரிக்கை வைக்க அதற்கு அமைச்சர் நேரு பதிலளித்தார். அதைத்தொடர்ந்து அதே விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
அதற்கு அமைச்சர் கே.என்.நேரு, உங்க ஆட்சியில் தான் இப்படி செய்திருக்கிறீர்கள் என்று பதில் சொல்லவே, சபாநாயகர் அப்பாவு சத்தமாகச் சிரித்தார்.

வார்டு எல்லை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி, பதில் நேரத்தில் அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டு எல்லைகளை மறுவரையறை செய்ய தமிழ்நாடு அரசு முன்வருமா என எம்.எல்.ஏ ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் நேரு பதில்
அதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் ஒரே சீராக வார்டு மறுவரையறை செய்யப்படும் என்றும் வார்டு மறுவரையறை தொடர்பாக அதிகாரிகளில் குழு அமைத்து அரசு நடவடிக்கை மேற்கொள்ளும், சென்னை, கோவை போன்ற மாநகராட்சிகளிலும் வார்டு எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ் வைத்த கோரிக்கை
அதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், வார்டு மறுவரையரை செய்யும் போது பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கணவர் ஒரு வார்டிலும், மனைவி ஒரு வார்டிலும், தந்தை ஒரு வார்டிலும், மகன் ஒரு வார்டிலும் இருக்கும் சூழல் இருக்கிறது. இதன் மூலம் குழப்பம் ஏற்படுகிறது. இதனையும் கவனத்தில் கொண்டு கூட்டுக் குடும்பமாக இருப்பவர்களை ஒரே வார்டில் மறுவரையரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

குலுங்கி குலுங்கி சிரித்த அப்பாவு
உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, கணவர் ஒரு இடத்திலும், மனைவி ஒரு இடத்திலும் இருந்தால் அதற்குப் பேர் குடும்பம் இல்லையே என சிரித்தபடி கூறினார். பின்னர் ஓபிஎஸ் கோரிக்கைக்குக் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ஒரு ஊரிலே செல்வாக்கு மிக்க நபர் தான் ஒரு வார்டில் நின்று கொள்ளலாம், தனது மனைவியை வேறு ஒரு வார்டில் நிறுத்தலாம் என்றுதான் திட்டமிட்டே பிரித்து வைத்துக் கொள்கிறார்கள், அதுவும் அதிமுக ஆட்சிக் காலத்தில் 2017ல் தான் இப்படி நடந்துள்ளது. இப்படி வார்டு மறுவரையறை செய்து தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்திருக்கிறீர்கள் என்றார். இதைக் கேட்டு சபாநாயகர் அப்பாவு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

வார்டு மறுவரையறை
தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை இரு துறைகளின் அதிகாரிகளும் இணைந்து, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து குழு அமைத்து, இந்த விவகாரத்தை கவனித்து, மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டு மறுவரையறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications