பண்ணை வீட்டில் தள்ளாடிய 22 பெண்கள்.. இரவு விருந்தில் இப்படியா? நிர்வாண டான்ஸால் சீரழியும் கலாச்சாரம்
சென்னை: ரிசார்ட்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் விருந்து என்ற பெயரில் நடக்கும் போதை நிகழ்ச்சிக்கு பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. சிலசமயம் ஆபாச நடனங்களும் இதுபோன்ற விருந்துகளில் நடைபெறுவது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. இதுபோன்ற சீரழிவுகளில் பல சிறுமிகளும் சிக்கிவிடுவது கவலையை தந்து வருகிறது.. நேற்றைய தினம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அப்படியென்ன நடந்தது?
மேல்நாடுகளில் குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பாவில் நடத்தப்பட்டு வந்த நிர்வாண நடனங்கள், இப்போது நம்முடைய நாட்டுக்குள்ளும் எளிதாக நுழைந்துவிட்டது. நட்சத்திர விடுதிகள், தனியார் ரிசார்ட்களில், போதைப்பொருட்களை உபயோகப்படுத்தி ஆபாச நடனமாடும் ரேவ் பார்ட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன.

நிர்வாண விருந்தில் சினிமா நட்சத்திரம்
கடந்த வரும் கர்நாடக மாநில எல்லையான ஆனெக்கல் பகுதியில் இதுகுறித்த செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.. அங்குள்ள தனியார் ரிசார்ட்டில், பெங்களுரு பகுதியில் வேலைபார்த்து வரும் ஐடி கம்பெனி ஊழியர்கள், மாணவர்கள், இளம் பெண்கள் என 40 பேர் பங்கேற்ற ரேவ் பார்ட்டி நடந்துள்ளது..
அப்போது இரவு நேரத்தில் போதை பொருட்களை உட்கொண்டு, ஆபாச நடனமும் ஆடியிருக்கிறார்கள். இது தொடர்பாக ஆனெக்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுமே, அந்த ரிசார்ட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, 2 பெண்கள் உட்பட 35 பேரை கைது செய்தனர்.. ஆனாலும் பல பேர் போலீசாரை பார்த்ததுமே தப்பி ஓடிவிட்டார்கள்.
பண்ணை வீட்டில் நடன அழகிகள்
ஹை ஆப் (highapp.com) என்ற செயலி மூலம் முன்பதிவு செய்து இவர்கள் அனைவருமே இந்த விருந்துக்கு வந்துள்ளதும், நடன அழகிகள் நிர்வாணமாக நடனமாடியிருப்பதும் விசாரணையில் தெரியவந்து அதிர்ச்சியை தந்திருந்தது.
கடந்த மாதம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரிலும், இப்படியொரு நிர்வாண விருந்து நடப்பதாக அறிவிப்பு வெளியானது.. அங்குள்ள பண்ணை வீட்டில் இந்த நிர்வாண விருந்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மும்பை, பெங்களுருவை சேர்ந்த சினிமா பிரபலங்கள் பலரும் இதில் பங்கேற்க தயாராக இருந்தார்களாம்.
நிர்வாண விருந்து நிகழ்ச்சி
ஒவ்வொருவருக்கும் தலா ரூ.40 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. சில காதல் ஜோடிகள், ரூ.1 லட்சம் கட்டணத்தையும் தந்து முன்பதிவு செய்துள்ளார்கள்.
"நிர்வாணமாகவே இந்த விருந்தில் கலந்து கொள்ளலாம்" என்று சோஷியல் மீடியாவில் விளம்பரங்கள் வெளிவரவும், சத்தீஸ்கர் மாநிலமே கொந்தளித்துவிட்டது. அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் திரண்டு எதிர்ப்புகளை பதிவிடவும், நடக்கவிருந்த அந்த நிர்வாண விருந்து நிகழ்ச்சியை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன், அந்த விருந்துக்கு ஏற்பாடு செய்த 7 பேரையும் கைது செய்திருந்தது நினைவிருக்கலாம்.
22 சிறுமிகள் - தள்ளாட்டம்
இந்நிலையில், தெலுங்கானாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. ஹைதராபாத்தின் மொய்னாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக கிளம்பி சென்றார்கள்.. அங்கு மொத்தம் 65 பேர் போதையில் நடனமாடி கொண்டிருந்தார்களாம்.. அதில் 22 சிறுமிகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுற்றி வளைத்த போலீஸ்
இதையடுத்து மொத்த பேரையும் சுற்றி வளைத்த போலீசார், அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்... மேலும் அந்த விருந்து நிகழ்ச்சியில் 2 பேர் கஞ்சா புகைத்திருந்ததும், மற்றவர்கள் மது அருந்தியிருந்ததும் உறுதி செய்யப்பட்டது.. இதையடுத்து அவர்களிடம் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
அதுமட்டுமல்ல, சோஷியல் மீடியா மூலம் ஆட்களை திரட்டி போதை விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக கனடாவை சேர்ந்த இஷான் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமும் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications